விராட் கோலியின் பத்தாயிரம் ரன்களும் நம்பமுடியாத சாதனைகளும்!

கடைசி 11 இன்னிங்ஸில் மட்டும் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் விராட் கோலி...
விராட் கோலியின் பத்தாயிரம் ரன்களும் நம்பமுடியாத சாதனைகளும்!

இந்திய கேப்டன் விராட் கோலி, குறைந்த இன்னிங்ஸில் 10,000 ஒருநாள் ரன்களை எடுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அவர் தனது 37-வது சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார். அவர் நிகழ்த்தியுள்ள பல சாதனைகளின் தொகுப்பு:

10,000 ஒருநாள் ரன்கள் - குறைந்த இன்னிங்ஸ்

விராட் கோலி - 205 இன்னிங்ஸ்
சச்சின் டெண்டுல்கர் - 259 இன்னிங்ஸ்

ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த வீரர்கள்

சச்சின், இன்ஸமாம், கங்குலி, ஜெயசூர்யா, லாரா, டிராவிட், பாண்டிங், காலிஸ், ஜெயவர்தனே, சங்கக்காரா, தில்ஷன், தோனி, கோலி.

கோலியின் 10,000 ஒருநாள் ரன்கள் (தோற்கடித்த சாதனை)

இன்னிங்ஸ்: 205 (முன்பு: சச்சின் 259 இன்னிங்ஸ்)
தேவைப்பட்ட நாள்கள்: 3270 (முன்பு: டிராவிட் 3969 நாள்கள்)
தேவைப்பட்ட பந்துகள்: 10,813 (முன்பு: ஜெயசூர்யா 11296 பந்துகள்)
அதிக ரன் சராசரி: 59.17 (முன்பு: தோனி 51.30)

ஒவ்வொரு ஆயிரம் ரன் எடுத்தபோதும் கோலியின் இன்னிங்ஸ் எண்ணிக்கை

1,000 ரன்கள் - 24 இன்னிங்ஸ் 
2,000 ரன்கள்: 53 இன்னிங்ஸ் 
3,000 ரன்கள்: 75 இன்னிங்ஸ் 
4,000 ரன்கள்: 93 இன்னிங்ஸ் 
5,000 ரன்கள்: 114 இன்னிங்ஸ்     
6,000 ரன்கள்: 136 இன்னிங்ஸ்
7,000 ரன்கள்: 161 இன்னிங்ஸ்
8,000 ரன்கள்: 175 இன்னிங்ஸ்
9,000 ரன்கள்: 194 இன்னிங்ஸ்
10,000 ரன்கள்: 205 இன்னிங்ஸ்

(கடைசி 11 இன்னிங்ஸில் மட்டும் ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.)

குறைந்த வயதில் 10,000 ஒருநாள் ரன்கள்

சச்சின் - 27 வருடம் 341 நாள்கள் 
விராட் கோலி - 29 வருடம் 353 நாள்கள் 
ரிக்கி பாண்டிங் - 32 வருடம் 095 நாள்கள்
கங்குலி - 33 வருடம் 026 நாள்கள் 

205 இன்னிங்ஸுக்குப் பிறகு அதிக ரன்கள்

விராட் கோலி - 10076 ரன்கள்
டி வில்லியர்ஸ் - 9,080 ரன்கள்

சொந்த மண்ணில் குறைந்த இன்னிங்ஸில் 4,000 ரன்கள்

கோலி - 78 இன்னிங்ஸ் 
டி வில்லியர்ஸ் - 91 இன்னிங்ஸ்
சச்சின் - 92 இன்னிங்ஸ் 
தோனி - 100 இன்னிங்ஸ் 
டீன் ஜோன்ஸ் - 103 இன்னிங்ஸ் 

விசாகப்பட்டணத்தில் கோலி: ஒருநாள் ஆட்டம்

118 v ஆஸ்திரேலியா, 2010 
117 v மே.இ., 2011 
99 v மே.இ., 2013 
65 v நியூஸிலாந்து, 2016 
157* v மே.இ., 2018 

ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 50+ ஸ்கோர்கள் 

7 முகமது யூசுப் (கராச்சி) 
6 ஜாவத் மியாண்டட் (ஷார்ஜா) 
5 ரிக்கி பாண்டிங் (மெல்போர்ன்) 
5 யூனிஸ் கான் (கராச்சி) 
5 பிரண்டன் டெய்லர் (ஹராரே) 
5 விராட் கோலி (விசாகப்பட்டணம்)

மே.இ. அணிக்கு எதிராக அதிக ரன்கள் - இந்திய வீரர்கள்

விராட் கோலி - 1684 ரன்கள்
சச்சின் - 1573 ரன்கள்
டிராவிட் - 1348 ரன்கள்
கங்குலி - 1142 ரன்கள்

3-ம் நிலை வீரராக அதிக சதங்கள்

விராட் கோலி - 30 சதங்கள் (153 இன்னிங்ஸ்)
பாண்டிங் - 29 சதங்கள் (330 இன்னிங்ஸ்)
சங்கக்காரா - 18 சதங்கள் (238 இன்னிங்ஸ்)

ஒருவருடத்தில் அதிவேகமாக 1000 ஒருநாள் ரன்களை எடுத்த வீரர்கள்

விராட் கோலி - 11 இன்னிங்ஸ் (2018)
ஹஸிம் ஆம்லா - 15 இன்னிங்ஸ் (2010)
விராட் கோலி - 15 இன்னிங்ஸ் (2012)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com