5 மணி நேர மாரத்தான்: 6-0 என முதல் செட்டை இழந்தும் போராடி வென்ற நடால்!

கடைசி செட்டை டை பிரேக்கருடன் முடிக்கும் யு.எஸ். ஓபன் விதிமுறைகள் மட்டும் அமலில் இல்லாமல் இருந்திருந்தால்...
5 மணி நேர மாரத்தான்: 6-0 என முதல் செட்டை இழந்தும் போராடி வென்ற நடால்!

முதல் செட்டை 6-0 எனத் தோற்ற நடால், அரும்பாடுபட்டு 5 செட்களில் போராடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கடைசி செட்டை டை பிரேக்கருடன் முடிக்கும் யு.எஸ். ஓபன் விதிமுறைகள் மட்டும் அமலில் இல்லாமல் இருந்திருந்தால் கடைசி செட் பல மணி நேரம் நீண்டிருக்கும். ரசிகர்களுக்குப் பெரிய அளவில் விருந்து படைத்த இந்தக் காலிறுதிச் சுற்றில் ஆஸ்திரியாவின் டொமினி தீம் நடாலுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினார்.

முதல் செட்டை ஒரு கேம் கூட வெல்லாமல் இழந்தார் நடால். ஒருநாள் முன்பு தான் ஃபெடரரின் தோல்வியைக் கண்ட ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்தது. ஆனால் சாம்பியன்களை அவ்வளவு சீக்கிரம் வீழ்த்தமுடியாது என்பது மீண்டும் நிரூபணமானது.

தனது உத்திகளை மாற்றிக்கொண்ட நடால், முதல் செட்டில் செய்த தவறுகளை வெகுவாகக் குறைத்தார். இதனால் அடுத்த இரு செட்களை 6-4, 7-5 என வென்று முன்னிலை பெற்றார் நடால். ஆட்டம் கை நழுவிப் போவதை உணர்ந்த தீம், அடுத்த செட்டில் ஆக்ரோஷமாக விளையாடினார். டை பிரேக்கர் வரை சென்ற அந்த செட்டை 7-6 என வென்று சமநிலைக்குக் கொண்டுவந்தார் தீம். 

கடைசி செட். வாழ்வா சாவா என்கிற நிலைமை.  

ஏஸ் நிறைய அடித்துத் திணறடித்தாலும் முதல் செட் போல கடைசி செட்டில் தீமால் ஆதிக்கம் செலுத்தமுடியாமல் போனது. கடும் போட்டி மனப்பான்மையுடன் இருவரும் விளையாடி அற்புதமான டென்னிஸ் ஆட்டத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்கள். 4 மணி நேரம் 49 நிமிடங்கள் வரை நடைபெற்ற கடைசி செட்டை 7-6 என வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார் நடால். இரவில் ஆரம்பித்த ஆட்டம் அதிகாலை 2.04 மணிக்கு நிறைவடைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com