இந்திய கபடி அணிகள் தேர்வில் குழப்பம்

ஜகார்த்தாஆசியப் போட்டியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின் இந்திய கபடி வட்டாரம் மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது.
இந்திய கபடி அணிகள் தேர்வில் குழப்பம்

ஜகார்த்தாஆசியப் போட்டியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின் இந்திய கபடி வட்டாரம் மேலும் ஒரு சிக்கலை சந்தித்துள்ளது.
 கடந்த பல ஆண்டுகளாக கபடி விளையாட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசியப் போட்டியைப் பொறுத்தவரை 7 முறை தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணி ஜகார்த்தா ஆசியப் போட்டியில் தோல்வியை சந்தித்து வெண்கலத்துடன் நாடு திரும்பியது. அதே நேரத்தில் மகளிர் அணியும் வெள்ளியை மட்டுமே வென்றது. கபடியில் புதிய சக்தியாக ஈரான் உருவாகி உள்ளது.
 இந்த பின்னடைவுடன் கபடி வீரர்கள், வீராங்கனைகள் உள்ள நிலையில், இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் (ஏகேஎஃப்ஐ) சனிக்கிழமை நடத்திய தேர்வுச் சுற்றில் போட்டி சங்கம் சார்பிலான வீரர், வீராங்கனை பங்கேற்றது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 இந்த தேர்வுச் சுற்றுக்கு ஆசியப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் எவரும் வரவில்லை. புதிய இந்திய கபடி கூட்டமைப்பு என்ற பெயரில் (என்கேஎஃப்ஐ) புதிய போட்டி சங்கம் உருவாகி உள்ளது. இச்சங்கம் பெங்களூருவில் கடந்த மாதம் தானாகவே தேர்வுச் சுற்றை நடத்தியது. அணிகளை தேர்வு செய்து ஆசியப் போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு எதிராக போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது.
 ஜகார்த்தா ஆசியப் போட்டிக்கான அணித் தேர்வில் முறைகேடு நடந்ததாக என்கேஎஃப்ஐ குற்றம் சாட்டியுள்ளது.
 கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லி உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில் செப்டம்பர் 15-ஆம் தேதி ஏகேஎஃப்ஐ தேர்வுச் சுற்று நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதில் தேசிய அணி வீரர்களை அழைக்க வேண்டும் என குறிப்பிடப்படவில்லை.
 என்கேஎஃப்ஐ வட்டாரங்கள் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி தான் எங்கள் தரப்பு வீரர்களை தேர்வுச் சுற்றுக்கு அழைத்து வந்தோம். ஆனால் ஏகேஎஃப்ஐ தரப்பு வீரர்கள் பங்கேற்கவில்û எனத் தெரிவித்தன.
 இதற்கிடையே சனிக்கிழமை மகளிர் பிரிவில் பல்வேறு வயதுப் பிரிவுகளில் அணிகள் தேர்வு ஏகேஎஃப்ஐ நடத்தியது. நீதிமன்ற பார்வையாளர் நீதிபதி எஸ்.பி.கார்க் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. இதுகுறித்து கேட்பதோது துணை செயலாளர் தியோராஜ் சதுர்வேதி நீதிமன்ற ஆணையின்படி நாங்கள் செயல்பட்டுள்ளோம். வேறு எதுவும் எனக்கு தெரியாது எனக்கூறிச் சென்று விட்டார்.
 போட்டி சங்கங்களின் செயல்பாட்டால் இந்திய கபடி விளையாட்டு மேலும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com