ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் 249

ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தான் 249

திஸாரா பெரைரா 5/55

ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அபுதாபியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் தொடக்க வீரர்கள் முகமது ஷஸாத், இஷானுல்லா ஜனத் ஆகியோர் சீரான தொடக்கத்தை தந்தனர். 11 ஓவர்கள் முடிவில் 57 ரன்களை எடுத்திருந்த போது, ஷஸாத் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷானுல்லா 45 ரன்களுக்கு வெளியேறினார்.
ரஹ்மத் ஷா 72: பின்னர் வந்த ரஹ்மத் ஷா 5 பவுண்டரிகளுடன் 72 ரன்களை குவித்து அணியின் ரன் எண்ணிக்கை உயர காரணமாக இருந்தார். ஹஸ்மத்துல்லா ஷஹிதி 35 தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அஷ்கர் ஆப்கன் 1, முகமது நபி 15, நஜிபுல்லா ஸத்ரன் 12, குல்பதின் நைப் 4, ரஷீத் கான் 13, முஜிப்பூர் ரஹ்மான் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 7 ரன்களுடன் அப்தாப் ஆலம் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆப்கன் அணி 249 ரன்களை எடுத்திருந்தது.
திஸாரா பெரைரா அபாரம்: இலங்கை தரப்பில் திஸாரா பெரைரா அபாரமாக பந்து வீசி 55 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார். அகிலா தனஞ்ஜெயா 2-39, மலிங்கா, துஷ்மந்தா, ஷேஹன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
250 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் குஸால் மெண்டீஸ் ரன் ஏதுமின்றி முஜீப் பந்தில் எல்பிடபியுள்யு ஆனார். 
இலங்கை 56/2: தனஞ்ஜெய டி சில்வா 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்திருந்தது இலங்கை அணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com