சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு தரவரிசை பட்டியலில் உலக சாம்பியன் பிரான்ஸுடன் இணைந்து முதலிடத்தைப் பெற்றுள்ளது பெல்ஜியம். இரு நாடுகள் இணைந்து முதலிடத்தை கூட்டாக வகிப்பது இதுவே முதன்முறையாகும்.
ரஷியாவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரையிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியுற்றது
பெல்ஜியம்.
தரவரிசைப் பட்டியல்
1 பிரான்ஸ்-பெல்ஜியம் (1729)
3 பிரேஸில் (1663)
4 குரோஷியா (1634)
5 உருகுவே (1632)
6 இங்கிலாந்து (1612)
7 போர்ச்சுகல் (1606)
8 ஸ்விட்சர்லாந்து (1598)
9 ஸ்பெயின் (1597)
10 டென்மார்க் (1581)