துளிகள்...

வரும் அக்டோபர் மாதம் சீனாவுடன் நடைபெறவுள்ள கால்பந்து நட்பு ஆட்டம் மூலம் இந்திய அணியின் ஆட்டத்திறன் மெருகேறும். சீனா வலுவான அணியாக உள்ளதால் ஆட்டம் கடினமாக இருக்கும்

*ஜார்ஜியாவின் பாட்டுமி நகரில் நடைபெறும் 43-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தரவரிசைப் பட்டியலில் 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளன. முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், 2 கிராண்ட்மாஸ்டர்கள் உள்பட பங்கேற்பதால் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் பிரிவில் கொனேரு ஹம்பி, ஹரிகா ஆகியோர் உள்பட வலுவான மகளிர் அணியும் பங்கேற்றுள்ளது.
*வரும் அக்டோபர் மாதம் சீனாவுடன் நடைபெறவுள்ள கால்பந்து நட்பு ஆட்டம் மூலம் இந்திய அணியின் ஆட்டத்திறன் மெருகேறும். சீனா வலுவான அணியாக உள்ளதால் ஆட்டம் கடினமாக இருக்கும். இதன் மூலம் 2019 ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை எதிர்கொள்ள முடியும் என தலைமை பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் தெரிவித்துள்ளார்.
*புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த டிராக் ஏஷியா சைக்கிள் கோப்பை போட்டியில் இந்திய அணி 6 தங்கம், 5 வெள்ளி, 1 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்றது. 
*திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த தேசிய நீச்சல் சாம்பியன் போட்டியில் கர்நாடக மாநிலம் 227 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர், மகளிர் பிரிவில் அணிகள் பட்டத்தையும் கர்நாடகமே வென்றது. ரயில்வே, டீம் எஸ்எப்ஐ அணிகள் முறையே இரண்டாவது இடத்தை வென்றன. ஆடவர் டைவிங் பிரிவில் சர்வீஸஸ் முதலிடத்தையும், ரயில்வே இரண்டாவது இடத்தையும் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com