துளிகள்...

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 11-1, 11-6, 11-5 என்ற செட்களில் ஊர்வசி ஜோஷியை வீழ்த்தி பட்டம் வென்றார்.

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 9-11, 11-1, 11-6, 11-5 என்ற செட்களில் ஊர்வசி ஜோஷியை வீழ்த்தி பட்டம் வென்றார். இத்துடன் 16-ஆவது முறையாக பட்டம் வென்றுள்ள ஜோஷ்னா, புவனேஷ்வரி குமாரியின் சாதனையை சமன் செய்துள்ளார். ஆடவர் பிரிவில் மகேஷ் மங்காவ்ன்கர் 11-4, 13-15, 11-2, 5-11, 15-13 என்ற செட்களில் விக்ரம் மல்ஹோத்ராவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் ஆனார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 59-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 6-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணியை வென்றது.

புரோ கபடி லீக் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 115-ஆவது ஆட்டத்தில் யு.பி. யோதா அணி 47-31 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வென்றது.

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின்போது நடுவர்களை விமர்சனம் செய்ததற்காக, இந்திய பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கிற்கு சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அதிகாரப்பூர்வ கண்டன கடிதம் அனுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்புக்காகவும், சமூக நலனுக்கான செயல்பாடுகளுக்காகவும் கெளதம் கம்பீருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com