ஐபிஎல் 2019: உனதிகட், வருண் சக்ரவர்த்தி ரூ.8.4 கோடிக்கு ஏலம்

 இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஐபிஎல் 2019: உனதிகட், வருண் சக்ரவர்த்தி ரூ.8.4 கோடிக்கு ஏலம்

மே.இ.தீவு வீரர்கள் ஆதிக்கம்
 இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் 12-ஆவது சீசன் வரும் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. 8 அணிகள் சார்பில் வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.
ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது.
இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன. 

ரூ.8.4 கோடிக்கு விலை போன உனதிகட், வருண் சக்ரவர்த்தி
ஐபிஎல் 2019 சீசனுக்கான ஏலத்தில் ரூ.8.4 கோடிக்கு வாங்கப்பட்டு அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களாக ஜெயதேவ் உனதிகட், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் திகழ்கின்றனர். முந்தைய சீசனில் ராஜஸ்தான் அணியால் ரூ.11.5 கோடிக்கு உனதிகட் வாங்கப்பட்டிருந்தார். அவரை வாங்க தற்போது ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை, தில்லி அணிகள் போட்டி போட்டன. இறுதியில் ராஜஸ்தான் அணியே அவரை ரூ.8.4 கோடிக்கு வாங்கியது.
அதே நேரத்தில் தமிழக ப்ரீமியர் லீகில் சிறப்பாக ஆடிய இளம் ஆல் ரவுண்டர் வருண் சக்ரவர்த்தி, ஏல வரம்பிலேயே வராத நிலையில் பஞ்சாப் அணியால் ரூ.8.4 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டார். இது அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்தைக் காட்டிலும் 42 மடங்கு கூடுதலாகும். வருண் சக்ரவர்த்தியை வாங்க தில்லி, சென்னை ராஜஸ்தான் அணிகள் மோதின.
ரூ.7.2 கோடி-சாம் கர்ரன்
இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் ரூ.7.2 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் காலின் இங்கிராம் தில்லி அணியால் ரூ.6.4 கோடிக்கு வாங்கப்பட்டார். மே.இ.தீவுகள் கேப்டன் கார்லோஸ் பிராத்வொயிட் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), அக்ஸர் பட்டேல் (தில்லி கேபிடல்ஸ்), மொகித் சர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ்), மும்பை அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான சிவம் துபே ரூ.5 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். 
முகமது சமி-ரூ.4.8 கோடி
முகமது சமி ரூ.4.8 கோடி (பஞ்சாப்), மே.இ.தீவுகள் இளம் அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் ரூ.4.2 கோடி( பெங்களூரு) மற்றொரு வீரரான நிக்கோலஸ் பூரன் ரூ.4.2 கோடி (பஞ்சாப்) அணியால் வாங்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோவ் ரூ.2.2 கோடி (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்) . ஹனுமா விஹாரி ரூ.2 கோடி (தில்லி), லசித் மலிங்கா ரூ.2 கோடிக்கு மீண்டும் மும்பை அணியால் வாங்கப்பட்டார். வருண் ஆரோன் ரூ.2.4 கோடி ( ராஜஸ்தான்), பரீந்தர் ஸ்ரன் ரூ.3.4 கோடி (மும்பை) அணிகளால் வாங்கப்பட்டனர். 
மும்பையால் வாங்கப்பட்ட யுவராஜ் சிங்
முந்தைய ஐபிஎல் சீசனில் ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட யுவராஜ் சிங், தற்போதைய சீசனில் சரியாக ஆடவில்லை. இரண்டாவது சுற்று ஏலத்தின் போது யுவராஜ் சிங்கின் அடிப்படை தொகையான ரூ.1 கோடி செலுத்தி வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.
பிரப் சிம்ரன் ரூ.4.8 கோடி (பஞ்சாப்), அக்ஷதீப் சிங் ரூ.3.6 கோடி (மும்பை), மார்ட்டின் குப்தில் ரூ. 1 கோடி (ஹைதராபாத்). ரூதர்போர்ட் ரூ.2 கோடி (தில்லி).
மேலும் இந்திய அணி வீரர் சேதேஸ்வர் புஜாரா, நியூஸி வீரர் பிரென்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், , அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின்ஸ் ஆகியோரையும் எவரும் முதல் சுற்றில் வாங்கவில்லை. 
முதல் சுற்று ஏலம் முடிந்த நிலையில் 45 நிமிடங்கள் ஓய்வு நேரம் அறிவிக்கப்பட்டது.
ரூ.106.8 கோடிக்கு 60 வீரர்கள் ஏலம்
இரவு 10 மணி நிலவரத்தின்படி 19 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 60 வீரர்கள் வாங்கப்பட்டிருந்தனர். ரூ.106.8 கோடி இதற்காக செலவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com