ஐபிஎல் ஏலம்: ஏமாற்றமடைந்த தமிழக வீரர்கள்

மீதமிருந்த ஏழு தமிழக வீரர்களையும் ஏலத்தில் எந்த அணியும் சீந்தவில்லை... 
ஐபிஎல் ஏலம்: ஏமாற்றமடைந்த தமிழக வீரர்கள்

இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்றது. ஐபிஎல் 12 போட்டி வரும் மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன. 

ஐபிஎல் ஏலத்தில் 9 தமிழக வீரர்கள் பங்கேற்றார்கள். 

2019 ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களும் அவர்களுடைய அடிப்படைத் தொகைகளும்

1. பாபா இந்திரஜித் - ரூ. 20 லட்சம்
2. பாபா அபரஜித் - ரூ. 20 லட்சம்
3. அனிருதா ஸ்ரீகாந்த் - ரூ. 30 லட்சம்
4. எம். அஸ்வின் முருகன் - ரூ. 20 லட்சம்
5. சி.வி. வருண் சக்கரவர்த்தி - ரூ. 20 லட்சம்
6. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
7. ஆர். விவேக் - ரூ. 20 லட்சம்
8. ஆர். சஞ்சய் யாதவ் - ரூ. 20 லட்சம்
9. கே. விக்னேஷ்  - ரூ. 30 லட்சம்.

இவர்களில் ஜாக்பாட் அடித்தவர், வருண் சக்கரவர்த்தி. அடிப்படை விலை ரூ. 20 லட்சம் என்றபோதும் இறுதியில் அவரை ரூ. 8.40 கோடிக்குத் தேர்வு செய்தது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி. அதேபோல முருகன் அஸ்வினையும் அவருடைய அடிப்படை விலைக்கு பஞ்சாப் தேர்வு செய்தது.

மற்றபடி மீதமிருந்த ஏழு தமிழக வீரர்களையும் ஏலத்தில் எந்த அணியும் சீந்தவில்லை. இதனால் பாபா இந்திரஜித், பாபா அபரஜித், அனிருதா ஸ்ரீகாந்த், சாய் கிஷோர், ஆர். விவேக், ஆர். சஞ்சய் யாதவ், கே. விக்னேஷ் ஆகியோருக்கு 2019 ஐபிஎல்-லில் இடமில்லை. 

கடந்த ஐபிஎல் ஏலத்தில் இளம் வீரர் பாபா அபரஜித்தும் அவரது சகோதரர் இந்திரஜித்தும் எந்த அணிக்கும் தேர்வாகவில்லை. அபினவ் முகுந்த், ரஹில் ஷா, அதிசயராஜ் டேவிட்சன், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ் போன்ற தமிழக வீரர்களையும் எந்த அணியும் சீந்தவில்லை.

2019 ஐபிஎல்-லில் விளையாடவுள்ள தமிழக வீரர்கள்

1. வருண் சக்கரவர்த்தி - பஞ்சாப் - ரூ. 8.40 கோடி

2. ஆர். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 7.60 கோடி
3. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி  
4. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி 
5. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி 
6. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி 
7. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம் 
8. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்

9. எம். அஸ்வின் - ரூ. 20 லட்சம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com