பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் மௌனம் கலைத்தார் ஆஸி. வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸி. வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் தற்போது மௌனம் கலைத்துள்ளார்.
பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் மௌனம் கலைத்தார் ஆஸி. வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸி. வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் தற்போது மௌனம் கலைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்து சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இது சர்வதேச கிரிக்கெட் உலகையே அதிரச் செய்தது. இதில், அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், தலைமைப் பயிற்சியாளர் டேரன் லீமேன், கேமரூன் பென்கிராஃப்ட் உள்ளிட்டோருக்கு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பயிற்சியாளர் டேரன் லீமேனிடம் இருந்து களத்தில் இருந்த கேமரூன் பென்கிராஃப்ட்டிடம் சக அணி வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் தகவல் அனுப்பியதாக விடியோ பதிவுகள் வெளியாகின.

இதுதொடர்பாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் தற்போது மௌனம் கலைத்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

அந்த விடியோப் பதிவை இத்தனை அழகாக ஊடகங்கள் மாற்றியமைத்தது வியப்பளிக்கிறது. அதில் நான் வாக்கி-டாக்கியுடன் களத்துக்குச் சென்று கேமரூனுடன் பேசியதாக பதிவாகியுள்ளது. ஆனால், உண்மையில் நான் கேமரூனுக்கு அடுத்த இடத்தில் ஃபீல்டிங் செய்ய உத்தரவிடப்பட்டேன். அப்போது அவருடன் காமெடியாகப் பேசிக்கொண்டிருந்தேன். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால், இதில் இல்லாததை இருப்பதாக ஊடகங்கள் காண்பித்துவிட்டன என்றார்.

இருப்பினும் களத்துக்கு வருவதற்கு முன்பாக பயிற்சியாளர் டேரன் லீமேனுடன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அது ஏற்கனவே பதிவாக இருப்பதாக கூறியவர், அதுதொடர்பாக விளக்கமளிக்க மறுத்துவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com