யுஎஸ் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் அஜய் ஜெயராம்

யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்திய வீரர் அஜய் ஜெயராம் தகுதி பெற்றுள்ளார்.

யுஎஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றுக்கு இந்திய வீரர் அஜய் ஜெயராம் தகுதி பெற்றுள்ளார்.
முதல் சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவின் யுன் கியு லீயை 26-24, 17-21, 21-13 என போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு தேசிய சாம்பியன் போட்டியின்போது காயமடைந்த ஜெயராம் தற்போது குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார். அடுத்த சுற்றில் பிரேசிலின் கோர் கோஹலேவை எதிர்கொள்கிறார் ஜெயராம்.
மகளிர் பிரிவில் அனுரா பிரபு தேசாய் 9-21, 17-21 என்ற செட் கணக்கில் கனடாவின் ரேச்சல் ஹோண்ட்ரைச்சிடம் தோல்வியடைந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com