சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்: ஐபிஎல் போட்டியிலிருந்து நியூஸி. ஆல்ரவுண்டர் சாண்ட்னர் விலகல்!

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர்...
சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றம்: ஐபிஎல் போட்டியிலிருந்து நியூஸி. ஆல்ரவுண்டர் சாண்ட்னர் விலகல்!

இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நியூஸிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர், காயம் காரணமாக வ் ஐபிஎல்-லில் இருந்து விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாண்ட்னருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயம் தீவிரமாக உள்ளதால் தற்போது அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காயத்துக்கு 9 மாதங்கள் சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல், கவுண்டி ஆட்டங்கள் போன்ற முக்கியமான போட்டிகளில் சாண்ட்னரால் பங்கேற்கமுடியாது.

26 வயது சாண்ட்னரை ஐபிஎல் ஏலத்தில் ரூ. 50 லட்சத்துக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 45*, 63*, 41, 67 என ரன்கள் குவித்தார் சாண்ட்னர். இதனால் அவருடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சுத் திறமைகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குப் பெரிய பலத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் காயத்தால் தற்போது அவரால் ஐபிஎல் போட்டியிலேயே விளையாடமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

எனினும் தற்போது சாண்ட்னருக்குப் பதிலாக மற்றொரு வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com