சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அபாரம், லிவர்பூல் அதிர்ச்சி

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றுக்கு பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் லிவர்பூல் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனா அபாரம், லிவர்பூல் அதிர்ச்சி

யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றுக்கு பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் லிவர்பூல் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.
 ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் கிளப் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை இரவு சான்சிரோவில் இன்டர்மிலன்-பார்சிலோனா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. மெஸ்ஸி இல்லாத நிலையிலும் ஆடிய பார்கா அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதே நேரத்தில் இன்டர்மிலனும் நாக் அவுட் சுற்று வாய்ப்பை உறுதிப் படுத்தியுள்ளது.
 டாட்டன்ஹாம் வெற்றி: இங்கிலாந்தின் வெம்ப்ளி மைதானத்தில் டாட்டன்ஹாம் அணியும்-ஜெர்மனியின் பிஎஸ்வி ஐந்தோவன் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஹாரி கேனால் டாட்டன்ஹாம் 2-1 என வென்றது.
 லிவர்பூல் அதிர்ச்சி: மற்றொரு பலம் வாய்ந்த அணியான லிவர்பூல் அணியும்-செர்பியாவின் ரெட் ஸ்டார் அணியும் மோதியதில் 2-0 என்ற கோல்கணக்கில் லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. ரெட் ஸ்டார் அணி வீரர் மிலன் பாக்கோவ் இரு கோலடித்து வெற்றிக்கு வித்திட்டார். இதனால் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு மங்கியுள்ளது. பாரிஸில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியும்-நேபோலி அணியும் மோதின. இது 1-1 என டிராவில் முடிந்தது. கிளியன் மாப்பே பிஎஸ்ஜி அணிக்கு துவக்க கோலை அடித்தார். எனினும் இரண்டாம் பாதியில் நேபோலி வீரர் லாரென்úஸா பதில் கோலடித்து சமன் செய்ய உதவினார்.
 லிவர்பூல், நேபோலி அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமமாக உள்ளன. அதற்கு அடுத்து பாரிஸ் செயின்ட் ஜெர்மன், ரெட்ஸ்டார் அணிகள் உள்ளன.
 அதெலெட்டிக்கோ மாட்ரிட் 4-0 என போருஷ்ஸா டார்ட்மண்டையும், கிளப் பிரஜ் 4-0 என மொனாக்கோவையும் வீழ்த்தின.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com