ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: வெற்றியை நோக்கி பாக்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பை நெருங்கியுள்ளது.
ஷான் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது அப்பாஸ்.
ஷான் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது அப்பாஸ்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பை நெருங்கியுள்ளது.
துபையில் நடைபெறும் இப்போட்டியில் 462 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலியா, 4-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களே எடுத்துள்ளது. 
கடைசி நாளான வியாழக்கிழமை ஆட்டத்தில் அந்த அணி 7 விக்கெட்டுகளைக் கொண்டு 326 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அந்த அணி விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் வெல்லும். ஆட்டநேர முடிவு வரை விக்கெட்டை தக்கவைக்கும் பட்சத்தில் ஆட்டம் டிரா ஆகும்.
தற்போது ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 50, டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் 3 விக்கெட்டுகளையும் முகமது அப்பாúஸ சாய்த்துள்ளார்.
முன்னதாக கடந்த 7-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 164.2 ஓவர்களில் 482 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 83.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 280 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான், தனது 2-ஆவது இன்னிங்ஸில் 57.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து 462 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com