நேர்மை வென்றது: தினேஷ் கார்த்திக்கின் தேர்வு குறித்து ராபின் உத்தப்பா!

தகுதி மற்றும் ஆட்டத்திறன் அடிப்படையில் உலகக் கோப்பை அணியில் ஒரு வீரர் இருக்கவேண்டும் என்றால் அவர் தினேஷ் கார்த்திக் தான்...
நேர்மை வென்றது: தினேஷ் கார்த்திக்கின் தேர்வு குறித்து ராபின் உத்தப்பா!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் நேற்று அறிவித்தது பிசிசிஐ. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் தற்போது விளையாடி வரும் ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக்கின் தேர்வு குறித்து ட்விட்டரில் கூறியதாவது:

தகுதி மற்றும் ஆட்டத்திறன் அடிப்படையில் உலகக் கோப்பை அணியில் ஒரு வீரர் இருக்கவேண்டும் என்றால் அவர் தினேஷ் கார்த்திக் தான். நேர்மை வென்றது. கடந்த இரண்டு வருடங்களில் இந்திய அணியில் உள்ள சிறந்த ஃபினிஷர் அவர்தான் என்று தினேஷ் கார்த்திக்கைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com