உலகக் கோப்பை அணியில் இடம் பெறாதது வேதனை தருகிறது

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாதது வேதனை தருகிறது என தில்லியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை அணியில் இடம் பெறாதது வேதனை தருகிறது


உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாதது வேதனை தருகிறது என தில்லியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான்-தில்லி இடையே திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் 191-6 ரன்களையும், பின்னர் ஆடிய தில்லி 193-4 ரன்களையும் 
குவித்தன. ரஹானே அபாரமாக ஆடி 105 ரன்களை விளாசினார். 

பதிலுக்கு தில்லியின் ரிஷப் பந்த் சிறப்பாக ஆடி 78 ரன்களை எடுத்தார்.

தில்லி கேப்டன் ஷிரேயஸ் ஐயர்

வெளி மைதானங்கள் எங்கள் அதிர்ஷ்டமானவையாக உள்ளன. எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடி ரன்களை சேர்க்கின்றனர். பவர்பிளேயில் தவன் சிறப்பாக ஆடி வருகிறார். தில்லியில் பிட்ச் எவ்வாறு செயல்படும் எனத் தெரியாமல், சொந்த மைதானத்தில் தோல்வி கண்டோம். தற்போது ஒருங்கிணைந்து அணியினர் ஆடி வருகின்றனர். ரஹானே அற்புதமாக ஆடினார். ராஜஸ்தான் ஸ்கோர் 200-ஐ கடக்கும் என எதிர்பார்த்தோம். ஒரு பேட்ஸ்மேன் நீண்ட நேரம் நிலைத்து ஆட வேண்டும் என ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறினார். நானும், ரிஷப் பந்த்தும் அதை கடைபிடித்தோம்.

ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித் 

எங்கள் பேட்டிங் சிறப்பாக தான் அமைந்தது. எனினும் கடைசி ஓவர்களில் ரபாடா ஆட்டத்தின் போக்கை மாற்றி விட்டார். பிட்ச் நன்றாக ஒத்துழைத்தது. பவர்பிளேயில் தில்லி அணி எங்கள் பவுலர்களை பதம் பார்த்தனர். ஷிகர் தவன் சிறப்பாக ஆடினார். பந்த் அற்புதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பனி மூட்டத்தால் எங்கள் பந்துவீச்சு சிரமத்துக்குள்ளானது. ஆர்ச்சர் எங்களுக்கு சிறப்பாக பந்துவீசினார்.

வேதனை தருகிறது: ரிஷப் பந்த்

எங்கள் அணியை வெல்லச் செய்தது மகிழ்ச்சி தருகிறது. எனினும் நான் பொய் கூற விரும்பவில்லை. உலகக் கோப்பை அணியில் இடம் பெறாதது மனதுக்கு வேதனையாக உள்ளது. எனது திறமை மீது நம்பிக்கை வைத்து ஆடுகிறேன். இந்த பிட்ச் எவ்வாறு இயங்கும் என அறிந்து அதற்கேற்ப ஆடினேன். ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com