ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா வெற்றி தொடக்கம்

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா வெற்றி தொடக்கம்

சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சிந்து, ஜப்பான் வீராங்கனை தகாஹஷி சயாகாவை 21-14, 21-7 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தினார்.
மொத்தம் 28 நிமிடங்களில் இவர் வெற்றி பெற்றார்.
போட்டித் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள சிந்து, அடுத்த சுற்று ஆட்டத்தில் இந்தோனேஷிய வீராங்கனை சோரன்னிசாவை எதிர்கொள்கிறார்.
சர்வதேச தரவரிசையில் 9ஆவது இடத்திலும், போட்டித் தரவரிசையில் 7ஆவது இடத்திலும் உள்ள சாய்னா, சீன வீராங்கனை ஹன் யூவை புதன்கிழமை சந்தித்தார்.
முதல் செட்டை 12-21 என்ற கணக்கில் கோட்டை விட்ட சாய்னா, அதற்கு அடுத்த 2 செட்களையும் எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 21-11 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 21-17 என்ற கணக்கிலும் வசப்படுத்தினார் சாய்னா.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாய்னா, அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவின் கிம் கா எயுனுடன் மோதுகிறார்.
வெளியேறினார் ஸ்ரீகாந்த்: ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 16-21, 20-22 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் எஸ்.ஹெச்.ருஸ்தாவிடோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். 
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா, 21-13, 17-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பான் வீரர் சகாய் கஸூமசாவை வீழ்த்தி அடுத்து சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். 
ஆடவர் இரட்டையர் பிரிவில் எம்.ஆர்.அர்ஜன், ராமச்சந்திர ஷ்லோக் இணை, 18-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஹே ஜிதிங், டான் கியாங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com