துளிகள்...

    டோக்கியோவில் வரும் 17-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் ஆட்டங்களில் உயர்தரவரிசையில் உள்ள எந்த அணியையும் வெல்ல முடியும் என இந்திய ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மகளிர் அணி கேப்டன் ராணி ராம்பால் கூறியுள்ளனர்.


    ஒவ்வொரு நாளும் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், மனிதநேயம் மிக்கவராகவும் என்னை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆட்டமும் எனது வாழ்நாளில் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் கூறியுள்ளார்.


    2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சீன மகளிர் வாலிபால் அணி வீராங்கனை யாங் பேங்ஸுவுக்கு  தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அவரால் பங்கேற்க முடியாது.


    பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் தலைமை பயிற்சியாளர் பணியிடத்துக்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் விண்ணப்பித்துள்ளார். 49 டெஸ்ட், 169 ஒருநாள் ஆட்டங்களில் அவர் 496 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.


    உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டி ஆடவர் 86 கிலோ பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் தீபக் புனியா தகுதி பெற்றுள்ளார். 57 கிலோ பிரிவில் விஜய், 97 கிலோ பிரிவில் ஆகாஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதுகின்றனர். 


    பிசிசிஐ சட்டவரையறை குறித்து இறுதி முடிவெடுப்பதற்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் விசாரணையின் நிலையை அறிய 10 மாநில சங்கங்கள் காத்திருக்க தீர்மானித்துள்ளன. அக்.22-ஆம் தேதி பிசிசிஐஅமைப்பு நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று முடியும் வரை குழப்பமான சூழ்நிலையே நிலவும் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com