ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய இளம் வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்றார்.
ஜெர்மனியின் சூல் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவர் 25 மீ ரேபிட் பையர் பிஸ்டல் பிரிவில் 584 புள்ளிகளுடன் தங்கம் வஎன்றார் அனிஷ் பன்வாலா. ரஷிய வீரர் இஸ்மகோவ், ஜெர்மனியின் புளோரியன் பீட்டர் முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். இதுவரை இந்தியா 8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.