பிஃபா மகளிர் உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டங்களில் ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சீனா-ஸ்பெயின் அணிகள் ஆடிய ஆட்டம் கோலின்றி 0-0 என டிராவில் முடிந்தது.
அதே பிரிவில் ஜெர்மனி-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 4-0 என ஜெர்மனி வென்றது.
குரூப் ஏ பிரிவில் வலுவான பிரான்ஸ் அணி 1-0 என நைஜீரியா அணியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் நார்வே அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வென்றது.