சாம்பியன்ஸ் லீக்: நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் வெளியேற்றம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ரவுண்ட் 16 சுற்றில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்டை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அஜாக்ஸ் எஃப்சி காலிறுதிக்கு முன்னேறியது.
சாம்பியன்ஸ் லீக்: நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் வெளியேற்றம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் ரவுண்ட் 16 சுற்றில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்டை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அஜாக்ஸ் எஃப்சி காலிறுதிக்கு முன்னேறியது.
ஏற்கெனவே  கோபா டெல் ரே, லா லீகா போட்டிகளில் தோல்வியுற்று வெளியேறி பட்ட வாய்ப்பை இழந்தது ரியல் மாட்ரிட்.
தற்போதைய சீசனில் பட்டம் வெல்ல அந்த அணிக்கு சாம்பியன்ஸ் லீக் மட்டுமே வாய்ப்பாக இருந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற அஜாக்ஸ் அணியுடனான ஆட்டத்தில் 4-1 என படுதோல்வி அடைந்தது.
சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை தொடர்ந்து 3 முறை வென்ற சிறப்பை பெற்ற ரியல் மாட்ரிட் தற்போது படுதோல்வி அடைந்து வெளியேறியது. அஜாக்ஸ் அணி 5-3 என்ற கோல் சராசரியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில் டாட்டன்ஹாம்: அதே நேரத்தில் மற்றொரு ஆட்டத்தில் டாட்டான்ஹாம் அணி 1-0 என்ற கோல்கணக்கில் போர்ஷியா டார்ட்மண்ட் அணியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது. நட்சத்திர வீரர் ஹாரி கேன் வெற்றி கோலை அடித்தார். கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு சீசனுக்கு பின் முதன்முறையாக டாட்டன்ஹாம் அணி சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com