ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் முகமது ஆமீர், வஹாப் ரியாஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமீர். வஹாப் ரியாஸ் ஆகியோர் இடம் பெறவில்லை. இதற்கிடையே பாஹிம் அúஷ்ரப், ஜுனைத் கான் ஆகியோர் காயமுற்றனர். இதற்கிடையே 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அபித் அலிக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப் அலி சேர்க்கப்பட்டார். பாஹிம் அúஷ்ரப், ஜுனைத் கானுக்கு பதிலாக முகமது ஆமீர், வஹாப் ரியாஸ் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசிப் அலியின் மகள் புற்றுநோய் பாதிப்பால் வார இறுதியில் உயிரிழந்தார்.
அக்குழந்தையின் இறுதிச் சடங்கு முடிந்த பின், பயிற்சி ஆட்டங்களின் போது ஆசிப் அலி திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் 350 ரன்களை வாரி வழங்கினர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.