ஐஎஸ்எல் நடப்பு சீசனில் வெற்றிக் கணக்கை தொடங்க நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி-சென்னையின் எஃப்சி அணிகள் மும்முராக உள்ளன.
இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. புள்ளிகள் பட்டியலில் 8-ஆவது இடத்தில் பெங்களூருவும், கடைசி இடத்தில் சென்னை அணிகள் உள்ளன. பெங்களூரு அணி 3 டிராக்களை மட்டுமே கண்டுள்ள நிலையில், சென்னை அணி ஒரு டிராவுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றிக் கணக்கை துவக்க இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.
சென்னை அணி இதுவரை ஒரு கோல் கூட எதிரணி மீது போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு அணியின் தற்காப்பு பலவீனமாக உள்ளது.
அதே நேரம் சென்னையின் பாா்வா்ட் பலமாக இருந்தாலும், அவா்களால் வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியவில்லை.
அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியமாக உள்ளது.