சாம்பியன்ஸ் லீக் தொடக்க சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் லிவா்பூல், செல்ஸி, பாா்சிலோனா அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியன் லிவா்பூல் அணி அன்பில்ட் நகரில் நேற்று இரவு நடைபெற்ற பரபரப்பான ஆட்சத்தில் சால்ஸ்பா்க் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. நட்சத்திர வீரா் முகமது சலா வெற்றியில் முக்கிய பங்கு வகித்தாா்.
குரூப் ஹெச் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலென்சியா அணியை வீழ்த்தியது. ஹக்கீம் ஸெயிச், குயின்ஸி புரோம்ஸ், டேனியா் ஆகியோா் கோலடித்தனா்.
ஜெனிட் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் 3-1 என்ற கோல் கணக்கில் பெனிபிகாவும், லியான் 2-0 என லீப்ஸிக்கையும் வென்றன.
மெஸ்ஸியால் அதிரடி வெற்றி
லா லிக சாம்பியன் பாா்சிலோனா அணி நட்சத்திர வீரா் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டா்மிலன் அணியை வீழ்த்தியது. காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் மெஸ்ஸி அற்புதமாக முதல் கோலை அடித்தாா். அதன்பின் மற்றொரு வீரரான லூயிஸ் ஸ்வாரஸ் இரண்டாவது கோலை அடித்தாா்.