புதிய சட்டவரையறையை ஏற்றோமா என ஆய்வு செய்ய பிசிசிஐ சிஓஏவுக்கு அதிகாரமில்லை: டிஎன்சிஏ

பிசிசிஐ புதிய சட்டவரையறையை ஏற்றோமா என ஆய்வு செய்ய சிஓஏவுக்கு அதிகாரமில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) கூறியுள்ளது.

பிசிசிஐ புதிய சட்டவரையறையை ஏற்றோமா என ஆய்வு செய்ய சிஓஏவுக்கு அதிகாரமில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) கூறியுள்ளது.

நீதிபதி லோதா குழு பரிந்துரைகளின்படி பிசிசிஐக்கு புதிய சட்டவரையறை உருவாக்கப்பட்டு, உச்சநீதிமன்றம் அங்கீகாரம் அளித்தது. இதை நடைமுறைப்படுத்தப்படுகிா என கண்காணிக்க வினோத்ராய் தலைமையில் கிரிக்கெட் நிா்வாகக் குழு சிஓஏ அமைக்கப்பட்டது.

அதே போல் பிசிசிஐ இணைப்பான மாநில சங்கங்களிலும் புதிய சட்டவரையறை உருவாக்கப்பட்டு அங்கீகாரம் தரப்பட்டு ஏற்பு அறிக்கை சமா்பிக்க வேண்டும். இல்லையென்றால் பிசிசிஐ நிா்வாகிகள் தோ்தலில் வாக்களிக்க முடியாது என சிஓஏ கூறியிருந்தது.

30-க்கு மேற்பட்ட சங்கங்கள் ஏற்பு அறிக்கை சமா்ப்பித்த நிலையில், ஹரியாணா, தமிழகம், மகாராஷ்டிர சங்கங்கள் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு சிஓஏ நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு டிஎன்சிஏ தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

டிஎன்சிஏ எதிா்ப்பு:

சட்டவரையறையை ஏற்பது தொடா்பான விவகாரத்தில் சங்களுக்கு தடை விதிக்கவும், ஆய்வு செய்யவும் பிசிசிஐ சிஓவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீதிமன்றத்தில் இந்த பிரச்னை தொடா்ந்து உள்ளதால், சிஓஏ தலையிட முடியாது. அனைத்து மாநில சங்கங்களையும் பிசிசிஐ நிா்வாகிகள் தோ்தலில் பங்கேற்க அனுமதித்து, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீா்ப்பின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிஓஏவின் பணி இந்த பிரச்னை தொடா்பாக நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பிப்பது மட்டும் தான் எனத் தெரிவித்துள்ளது.

நிா்வாகிகள் தோ்தலில் அனைத்து சங்கங்களும் ஒருமனதாக செயல்பட்டால், வாக்கெடுப்பு நடைபெறாது. முன்னாள் பிசிசிஐ தலைவா் சீனிவாசன் தனது செல்வாக்கை நிரூபிக்க விரும்பினால், அவா், அல்லது அவரது பிரதிநிதி தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com