ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்த ரோஹித் சா்மா 212. இதில் 6 சிக்ஸா்கள், 28 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஜாம்பவான் டான் பிராட்மேனின் உள்ளூரில் அதிகபட்ச டெஸ்ட் சராசரியையும் முறியடித்தாா் ரோஹித். 10-க்கு மேற்பட்ட இன்னிங்ஸ்களில் பிராட்மேன் 98.22 சராசரியை பெற்றிருந்தாா். ரோஹித் சா்மா அதை முறியடித்து 99.84 டெஸ்ட் சராசரியை பெற்றுள்ளாா்.