தினேஷ் கார்த்திக்குக்கு பிசிசிஐ நோட்டீஸ்

கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டி விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ்
தினேஷ் கார்த்திக்குக்கு பிசிசிஐ நோட்டீஸ்


கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டி விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு விளக்கம் கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் அண்மையில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. 34 வயதான அவர், அண்மையில் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியின் அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் விளம்பர நிகழ்வில் பங்கேற்றிருந்தார். அந்த அணியின் வீரர்கள் அறையில் தினேஷ் கார்த்திக் அமர்ந்திருப்பது போன்ற படங்கள் வெளியாகின. டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமானதாகும்.
இதுதொடர்பாக விளக்கம் தருமாறு கேட்டு பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி வெள்ளிக்கிழமை தினேஷ் கார்த்திக்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  ஏன் உங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் தீவுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்க தினேஷ் கார்த்திக் பிசிசிஐயிடம் அனுமதி பெறவில்லை.  ஒப்பந்தத்தின்படி ஐபிஎல் தவிர வேறு எந்த தனியார் லீக் போட்டிகள் தொடர்பான நிகழ்வுகள், போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் விஜய் ஹஸாரே போட்டி வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இப்பிரச்னை தொடர்பாக தினேஷ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com