சாம்கரண் ஹாட்ரிக்கால் செயலிழந்து விட்டேன்: ஷிரேயஸ் ஐயர்

பஞ்சாப் வீரர் சாம் கரண் ஹாட்ரிக் விக்கெட்டால், எங்கள் அணி வெறும் 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது என்னை பேச்சு மூச்சில்லாமல் செய்து விட்டது என தில்லி கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.
சாம்கரண் ஹாட்ரிக்கால் செயலிழந்து விட்டேன்: ஷிரேயஸ் ஐயர்


பஞ்சாப் வீரர் சாம் கரண் ஹாட்ரிக் விக்கெட்டால், எங்கள் அணி வெறும் 8 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது என்னை பேச்சு மூச்சில்லாமல் செய்து விட்டது என தில்லி கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறியுள்ளார்.
மொஹாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 166-9 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய தில்லி அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம் கரண் அபாரமான பந்துவீச்சால் தில்லியின் கடைசி 7 விக்கெட்டுகள் வெறும் 8 ரன்களுக்கு வீழ்ந்தன.
தில்லி அணி முந்தைய ஆட்டத்தில் கொல்கத்தாவை சூப்பர் ஓவரில் வென்றிருந்தது. ஆனால் இரண்டாவது முறையாக கைக்கு எட்டிய வெற்றியை தவறவிட்டது. 
இதுதொடர்பாக கேப்டன் ஷிரேயஸ் ஐயர் கூறியதாவது-
சாம் கரண் ஹாட்ரிக் மற்றும் எங்கள் அணி விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தது என்னை செயலிழக்கச் செய்து விட்டது. ரிஷப் பந்த்-காலின் இங்கிராம் வெற்றிக்கு அருகில் அணியை கொண்டு சென்றனர். 21 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 7 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் ஷமி, சாம் துல்லியமான பந்துவீச்சு எங்கள் வெற்றியைத் தடுத்து விட்டது. இந்த தோல்வி மிகுந்த அதிருப்தியாக உள்ளது. அனைத்து வகைகளிலும் பஞ்சாப் எங்களை வீழ்த்தி விட்டனர்.இதுபோன்ற ஆட்டங்களை இழப்பது இறுதியில் எங்களுக்கு சிக்கலை தரும், வியாழக்கிழமை ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கவனமுடன் ஆட வேண்டும். ஒருங்கிணைந்து பேட்டிங் செய்கிறோம். சிறிய தவறுகளை தவிர்க்க வேண்டும் என்றார்.
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதே தெரியாது


நான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதே எனக்கு தெரியாது. 
11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். நான்  என்ன செய்ய வேண்டும் என அஸ்வின் கூறினார். 
உள்ளூர் பேட்ஸ்மேன்களை எவ்வாறு கையாள வேண்டும் எனத் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com