சுடச்சுட

  

  இந்திய உலகக் கோப்பை அணியில் நான்காவது வேகப்பந்துவீச்சாளருக்கு இடமில்லாதது ஏன்?: தேர்வுக்குழுத் தலைவர் பதில்!

  By எழில்  |   Published on : 15th April 2019 03:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  umesh_yadav1

   

  ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

  இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ.

  உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் எப்படியும் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி என மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:

  இந்திய அணியில் ஏற்கெனவே இரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் உள்ளார்கள் (பாண்டியா, விஜய் சங்கர்). கெதர் ஜாதவ் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக இருப்பார். எனவே தான் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் போதும் என முடிவெடுத்தோம் என்று கூறியுள்ளார். 

  இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), பாண்டியா, குல்தீப் யாதவ்,  சஹால், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஜடேஜா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai