தில்லியிடம் சுருண்டது ஹைதராபாத்

ஹைதராபாத்தை 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி கேபிடல்ஸ்.
தில்லியிடம் சுருண்டது ஹைதராபாத்

ஹைதராபாத்தை 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி கேபிடல்ஸ்.
 முதலில் ஆடிய தில்லி 155/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஹைதராபாத் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 புள்ளிகள் பட்டியலில் தில்லி 4-ஆவது இடத்திலும், ஹைதராபாத் 6-ஆவது இடத்திலும் உள்ளன. டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங்கை தேர்வு செய்தது.
 தில்லிக்கு அதிர்ச்சி: தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 4, ஷிகர் தவன் 7 ஆகியோர் கலில் அகமது பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினர். அதிரடியாக ஆடிய காலின் மன்றோ 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 40 ரன்களுடன் அபிஷேக் சர்மா பந்தில் அவுட்டானார்.
 விக்கெட் வீழ்ச்சி: அவருக்கு பின் ஷிரேயஸ் ஐயர்-ரிஷப் பந்த் இணை நிதானமாக ஆடி ரன்களை சேகரித்தது. 5 பவுண்டரியுடன் 45 ரன்களுடன் ஷிரேயஸ் ஐயரும், 23 ரன்களுடன் ரிஷப் பந்த்தும் அவுட்டாயினர். ரஷித் கான் பந்துவீச்சில் 4 ரன்களுடன் கிறிஸ் மோரிஸ் போல்டானார். அப்போது தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களையே எடுத்திருந்தது.
 7 ரன்கள் எடுத்த கீமோ பாலை, எல்பிடபிள்யு செய்தார் புவனேஸ்வர். அக்ஸர் பட்டேல் 14, ரபாடா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது தில்லி.
 கலில் அகமது அபாரம் 3 விக்கெட்: ஹைதராபாத் தரப்பில் கலில் அகமது அபாரமாக பந்துவீசி 30 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 2-30, அபிஷேக் சர்மா, ரஷித்கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர்.
 156 ரன்கள் வெற்றி இலக்குடன் ஹைதராபாத் அணி தரப்பில் டேவிட் வார்னர்-ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி ஸ்கோர் எண்ணிக்கையை உயர்த்தினர். எனினும் முதல் விக்கெட்டாக பேர்ஸ்டோவ் 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 41 ரன்களுடன் வெளியேறினார். அவருக்கு பின் கேன் வில்லியம்ஸன் 3, ரிக்கி புய் 7, விஜய் சங்கர் 1, தீபக் ஹூடா 3, ரஷித் கான் 0 என சொற்ப ரன்கள் அவுட்டாயினர்.
 வார்னர் 40-ஆவது ஐபிஎல் அரைசதம்: வார்னர் மட்டுமே மறுமுனையில் நிலைத்து ஆடி வந்தார். அவர் 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 51 ரன்களை விளாசி அவுட்டானார். இது அவரது 40-ஆம் ஐபிஎல் அரைசதமாகும். அபிஷேக் வர்மாவும் 2, புவனேஸ்வர் குமார் 2, கலில் அகமது 0 என துரிதமாக வந்தவேகத்திலேயே திரும்பினர். சந்தீப் சர்மா 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
 இறுதியில் 18.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஹைதராபாத்.
 ரபாடா, மோரிஸ், கீமோ அபாரம்: தில்லியின் வேகப்பந்து வீச்சாளர்கள் காகிஸோ ரபாடா 4-22, கிறிஸ் மோரிஸ் 3-22, கீமோ பால் 3-17 என அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினர். தில்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை அதன் சொந்த மைதானத்திலேயே வீழ்த்தியது.
 2-ஆம் இடத்தில் தில்லி: இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் தில்லி 5 வெற்றி, 3 தோல்விகளுடன், 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.


 இன்றைய  ஆட்டம்
பெங்களூரு-மும்பை,
இடம்: மும்பை,
நேரம்: இரவு 8.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com