உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு: ஆம்லாவுக்கு வாய்ப்பு!
By எழில் | Published On : 18th April 2019 05:40 PM | Last Updated : 18th April 2019 05:40 PM | அ+அ அ- |

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டு பிளெஸிஸ் தலைமையிலான அணியில் ஹாசிம் ஆம்லா இடம்பெற்றுள்ளார். இந்த அணியில் கிறிஸ் மாரிஸுக்கு இடமில்லை.
தென் ஆப்பிரிக்க அணி: டு பிளெஸிஸ் (கேப்டன்), ஜெபி டுமினி, டேவிட் மில்லர், டேல் ஸ்டெயின், ஆண்டில் பெஹ்லுக்வயோ, இம்ரான் தாஹிர், ககிசோ ரபாடா, டுவைன் பிரேடோரியஸ், குயிண்ட் டி காக் (விக்கெட் கீப்பர்), அன்ரிச் நார்ஜே, லுங்கி என்ஜிடி, ஐடன் மார்க்ரம், வான் டர் டுஸ்ஸன், ஹாசிம் ஆம்லா, டப்ரைஸ் ஷம்சி.