போராடி தோற்றது கொல்கத்தா

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது கொல்கத்தா.
சதமடித்த மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் முன்பு ஆர்ப்பரிக்கும் விராட் கோலி. 
சதமடித்த மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக் முன்பு ஆர்ப்பரிக்கும் விராட் கோலி. 

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது கொல்கத்தா.
முதலில் ஆடிய பெங்களூரு 213/4 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 203/5 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்கை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து பெங்களூரு தரப்பில் பார்த்திவ் பட்டேல், விராட் கோலி களமிறங்கினர். 11 ரன்களுடன் பார்த்திவ் பட்டேலை, சுனில் நரைன் வெளியேற்றினார். அக்ஷதீப் நாத் 13 ரன்களுடன் ரஸ்ஸல் பந்துவீச்சில் அவுட்டானார்.
கோலி-மொயின் அலி அபாரம்: இதன் பின் கோலி-மொயின் அலி இணை அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். 
மொயின் அலி 3-ஆவது அரைசதம்: கோலிக்கு துணையாக அபாரமாக ஆடி வந்த மொயின் அலி 6 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 66 ரன்களை எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வெளியேறினார். தனது 3-ஆவது ஐபிஎல் அரைசதத்தையும் பதிவு செய்தார். அப்போது 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்திருந்தது பெங்களூரு.
கோலி 5-ஆவது ஐபிஎல் சதம்: மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த கோலி 4 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 58 பந்துகளில் 100 ரன்களை அடித்து தனது 5-ஆவது ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை குவித்தது பெங்களூரு.
கொல்கத்தா தரப்பில் ஹாரி குர்னே, சுனில் நரைன், ரஸ்ஸல், குல்தீப் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பெங்களூரு 203/5: 214 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா தரப்பில் கிறிஸ் லீன்-சுனில் நரைன் களமிறங்கினர். டெல் ஸ்டெய்ன் பந்துவீச்சில் 1 ரன்னோடு அவுட்டானார் லீன். அதிரடியாக ஆடி வந்த நரைன் 18 ரன்களோடும், ஷுப்மன் கில், உத்தப்பா ஆகியோர் 9 ரன்களோடும் வெளியேறினர். 
நிதீஷ் ராணா-ரஸ்ஸல் அதிரடி: நிதீஷ் ராணா-ரஸ்ஸல் இணை அதிரடியாக பெங்களூரு பந்துவீச்சை சிதறடித்தனர். 9 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 25 பந்துகளில் 65 ரன்களை விளாசிய ரஸ்ஸல், ரன் அவுட்டனார். 5 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 46 பந்துகளில் 85 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார் நிதீஷ்.
இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்களை எடுத்து போராடி தோற்றது கொல்கத்தா.
பெங்களூரு தரப்பில் ஸ்டெயின் 2-40, சைனி, ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com