1 ரன்னில் சென்னை தோல்வி: வீணானது தோனியின் ஆட்டம்

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை. தோனியின் அபார ஆட்டம் (84 ரன்கள்) விழலுக்கு இறைத்த நீரானது.
1 ரன்னில் சென்னை தோல்வி: வீணானது தோனியின் ஆட்டம்

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் பெங்களூரு அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது சென்னை. தோனியின் அபார ஆட்டம் (84 ரன்கள்) விழலுக்கு இறைத்த நீரானது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வுசெய்தது. இதைத் தொடர்ந்து கேப்டன் கோலி-பார்த்திவ் பட்டேல் களமிறங்கினர். ஆனால் 9 ரன்களுடன் கோலியை அவுட்டாக்கினார் சஹார்.
அதைத் தொடர்ந்து பார்த்திவ்-டி வில்லியர்ஸ் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். 1 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்த டி வில்லியர்ஸ் ஜடேஜா பந்தில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். அக்ஷதீப் நாத் 24, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 14, மொயின் அலி 26, பவன் நேகி 5 என அவுட்டாகினர்.
உமேஷ் யாதவ் 1 ரன்னோடு களத்தில் இருந்தார்.
பார்த்திவ் பட்டேல் 13-ஆவது அரைசதம்:
தொடக்க வீரர் பார்த்திவ் பட்டேல் 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 53 ரன்களை விளாசி, தனது 13-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் பிராவோ பந்துவீச்சில் வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்களை குவித்தது பெங்களூரு.
சென்னை தரப்பில் தீபக் சஹார் 2-25, பிராவோ 2-34, ரவீந்திர ஜடேஜா 2-29, இம்ரான் தாஹிர் 1-31 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆரம்பமே பேரதிர்ச்சி:162 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை தரப்பில் வாட்சன்-டூ பிளெஸிஸ் களமிறங்கினர். ஆனால் சென்னைக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. வாட்சன் 5, டூ பிளெஸிஸ் 5, கேதர் ஜாதவ் 9 என சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர். 
ரெய்னா கோல்டன் டக்: டேல் ஸ்டெயின் பந்துவீச்சில் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா கோல்டன் டக் அவுட்டானார். அப்போது 4 விக்கெட் இழப்புக்கு 28 ரன்களோடு சென்னை திணறிக் கொண்டிருந்தது. அம்பதி ராயுடு-தோனி இணை அணியை சரிவில் இருந்த மீட்க போராடியது. எனினும் ராயுடுவை 29 ரன்களுடன் போல்டாக்கினார் சஹல். பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா 11 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப்பால் ரன் அவுட் செய்யப்பட்டார். 
தோனி 23-ஆவது அரைசதம்: ஒருமுனையில் நிலைத்து ஆடிக் கொண்டிருந்த தோனி தனது 23-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். நவ்தீப் சைனி பந்துவீச்சில் 5 ரன்களுடன் அவுட்டானார் பிராவோ.
கடைசி பந்தில் தோல்வி: 6 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் உமேஷ் யாதவ் 20-ஆவது ஓவரை வீசியபோது, தோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸரை விளாசினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சர்துல் தாகுரை ரன் அவுட் செய்தார் பார்த்திவ் பட்டேல்.
முதுகுப்பிடிப்புடன் ஆடிய தோனியின் ஆட்டம் வீணானது: முதுகுப்பிடிப்பு பாதிப்புடன் ஆடிய தோனி 7 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 48 பந்துகளில் 84 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். 
இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை 160 ரன்களையே எடுத்தது. பெங்களூரு தரப்பில் ஸ்டெயின் 2-29, உமேஷ் யாதவ் 2-47 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com