முதலிடத்தில் சென்னை

ஹைதராபாதை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை. முதலில் ஆடிய ஹைதராபாத் 175/3 ரன்களை குவித்தது.
முதலிடத்தில் சென்னை

ஹைதராபாதை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை. முதலில் ஆடிய ஹைதராபாத் 175/3 ரன்களை குவித்தது. இரண்டாவதாக ஆடிய சென்னை  வாட்சனின் அபார ஆட்டத்தால் 176/4 ரன்களை எடுத்து வென்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஹைதராபாத் தரப்பில் வார்னர்-பேர்ஸ்டோவ் களமிறங்கிய நிலையில் ஹர்பஜன் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார் பேர்ஸ்டோவ்.

வார்னர்-மணிஷ் பாண்டே அதிரடி

மணிஷ் பாண்டே தனது 13-ஆவது ஐபிஎல் அரைசதத்தையும், வார்னர் தனது 43-ஆவது அரைசதத்தையும் பதிவு செய்தனர்.

2 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 57 ரன்களை வார்னர் எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்தில் அவுட்டானார். 26 ரன்கள் எடுத்த விஜய் சங்கரை அவுட் செய்தார் தீபக் சஹார்.

மணிஷ் பாண்டே 83

இறுதியில் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது ஹைதராபாத்.3 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 83 ரன்களுடன் மணிஷ் பாண்டேயும், 5 ரன்களுடன் யூசுப் பதானும் களத்தில் இருந்தனர்.

சென்னை தரப்பில் ஹர்பஜன் சிங் 2-39, சஹார் 1-30 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

176 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை தரப்பில் வாட்சன்-டூபிளெஸிஸ் களமிறங்கினர். ஆனால் 1 ரன் எடுத்த நிலையில் தீபக் ஹூடாவால் ரன் அவுட் ஆனார் டூபிளெஸிஸ். 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 38 ரன்களை விளாசிய  ரெய்னாவை, ரஷித்கான் பந்தில் ஸ்டம்ப்பிங் செய்தார் பேர்ஸ்டோவ்.

சதத்தை தவற விட்டார் வாட்சன்

6 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 96 ரன்களை விளாசிய வாட்சன், புவனேஸ்வர் பந்துவீச்சில் அவட்டாகி 4 ரன்களில் சதத்தை தவற விட்டார்.
அம்பதி ராயுடு 21 ரன்களுடன் வெளியேறினார். இறுதியில் 1 பந்து மீதமிருக்க 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்தது. கேதார் ஜாதவ் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஹைதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்                

சென்னை     11    8    3    16
தில்லி     11    7    4    14
மும்பை     10    6    4    12
ஹைதராபாத்    10    5    5    10
பஞ்சாப்    10    5    5    10
கொல்கத்தா    10    4    6    8
ராஜஸ்தான்    10    3    7    6
பெங்களூரு    10    3    7    6

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com