நினைவுகள்...: 2003 உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா

2003 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 3-ஆவது முறையாக சாம்பியன்  பட்டம்  வென்றது.
நினைவுகள்...: 2003 உலகக் கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலியா


2003 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 3-ஆவது முறையாக சாம்பியன்  பட்டம்  வென்றது.

ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற உலகக் கோப்பை என்ற சிறப்பை பெற்ற இப்போட்டியை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகியவை இணைந்து நடத்தின. 2003 பிப்ரவரி 9 முதல் மார்ச் 23 வரை நடத்தப்பட்ட இதில் உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிகளவாக 14 அணிகள்  கலந்து கொண்டன.  மொத்தம் 54 ஆட்டங்கள் நடைபெற்றன.

முதலில் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட அணிகள், அதில் இருந்து முதல் 3 அணிகள், சூப்பர் சிக்ஸ் பிரிவுக்கு தகுதி பெற்றன.

பலமான அணிகள் வெளியேற்றம்

இப்போட்டியில் பலமான அணிகளான தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், 
இங்கிலாந்து ஆகியவை குரூப் ஆட்டத்தோடு வெளியேற்றப்பட்டன. 
டெஸ்ட் ஆடாத அணியான கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து பங்கேற்காததால், அரையிறுதிக்கு தகுதி பெற்றது கென்யா.

போதை மருந்தால் வார்னே நீக்கம்

அதே போல் ஆஸி. அணியின் பிரதான பந்துவீச்சாளரான ஷேன் வார்னே தடை செய்யப்பட்ட போதை மருந்தை உட்கொண்டது சோதனையில் தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டார்.

இந்திய அணி லீக் ஆட்டங்கள்

நெதர்லாந்தை 68 ரன்களிலும், ஜிம்பாப்வேயை 83 ரன்களிலும், நமீபியாவை 181 ரன்களிலும், இங்கிலாந்தை 82 ரன்களிலும், பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்ற இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

சூப்பர் சிக்ஸ் பிரிவு

ஆஸ்திரேலியா, இந்தியா, கென்யா, இலங்கை, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே உள்ளிட்டவை தகுதி பெற்றன. இதில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, கென்யா, இலங்கை தகுதி பெற்றன.

அரையிறுதி

ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது, ஆஸி. 212/7, இலங்கை 123/7 டிஎல்எஸ் முறையில் தோல்வி. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் கென்யாவை வென்றது. இந்தியா 270/4, கென்யா 179,) சச்சின் 83, கங்குலி 111, ஜாகீர் கான் 3-14 ஆகியோர் வெற்றிக்கு வித்திட்டனர்.

3-ஆவது முறை ஆஸி. சாம்பியன்

இறுதிச் சுற்றில் இந்தியாவை 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-ஆவது முறையாக கோப்பை வென்றது ஆஸி. ஆஸ்திரேலியா 359/2, இந்தியா 234).


அதிக ரன்கள் எடுத்தவர்: 

சச்சின் டெண்டுல்கர் (673).
அதிக விக்கெட் வீழ்த்தியவர்:
சமிந்தா வாஸ் (23).

-தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com