ஆர்சிபி அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?: எளிதான சாத்தியக்கூறுகள்!

7 வெற்றிகள், 14 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி பிளேஆஃப்-புக்குச் செல்லமுடியுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா...
ஆர்சிபி அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற என்ன செய்யவேண்டும்?: எளிதான சாத்தியக்கூறுகள்!

முதல் ஆறு ஆட்டங்களில் தோல்வி. முதல் 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி... என நாளுக்கு நாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிலைமை தலைகீழாக மாறியது. கடைசி 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டுள்ளது ஆர்சிபி அணி.

7 வெற்றிகள், 14 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி பிளேஆஃப்-புக்குச் செல்லமுடியுமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டா? பார்க்கலாம்.

முதல் சாத்தியக்கூறு

 போட்டி வெற்றி
 ராஜஸ்தான் - சன்ரைசர்ஸ் ராஜஸ்தான்
 தில்லி - பெங்களூர் பெங்களூர்
 கொல்கத்தா - மும்பை மும்பை
 சன்ரைசர்ஸ் - பஞ்சாப் சன்ரைசர்ஸ்
 பெங்களூர் - ராஜஸ்தான் பெங்களூர்
 சென்னை - தில்லி சென்னை (அ) தில்லி
 மும்பை - சன்ரைசர்ஸ் மும்பை
 பஞ்சாப் - கொல்கத்தா பஞ்சாப் (அ) கொல்கத்தா
 தில்லி - ராஜஸ்தான் தில்லி
 பெங்களூர் - சன்ரைசர்ஸ் பெங்களூர்
 சென்னை - பஞ்சாப் சென்னை
 மும்பை - கொல்கத்தா மும்பை (அ) கொல்கத்தா

சென்னை - 18, மும்பை - 20, தில்லி - 18, பெங்களூர் - 14, சன்ரைசர்ஸ் - 12, பஞ்சாப் - 10, கொல்கத்தா - 10, ராஜஸ்தான் - 10. 

இந்தச் சாத்தியக் கூறுகள் மூலம் 14 புள்ளிகள் மூலம் நெட் ரன்ரேட் சிக்கல் இல்லாமல்  நேராக பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும் ஆர்சிபி அணியால். பச்சை வண்ணம் அடித்த ஆட்டங்களில் இரண்டு அணிகளில் எந்த அணி ஜெயித்தாலும் அதனால் பெங்களூர் பிளேஆஃப்-புக்குச் செல்வது பாதிக்காது. அந்த மூன்று ஆட்டங்களிலும் தில்லி, கொல்கத்தா, மும்பை ஜெயிப்பதாக வைத்துக்கொண்டால் மேலே சொன்னபடி புள்ளிகள் கிடைக்கும்.

2-வது சாத்தியக்கூறு

 போட்டி வெற்றி
 ராஜஸ்தான் - சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ்
 தில்லி - பெங்களூர் பெங்களூர்
 கொல்கத்தா - மும்பை மும்பை
 சன்ரைசர்ஸ் - பஞ்சாப் பஞ்சாப்
 பெங்களூர் - ராஜஸ்தான் பெங்களூர்
 சென்னை - தில்லி சென்னை
 மும்பை - சன்ரைசர்ஸ் மும்பை
 பஞ்சாப் - கொல்கத்தா கொல்கத்தா
 தில்லி - ராஜஸ்தான் ராஜஸ்தான் 
 பெங்களூர் - சன்ரைசர்ஸ் பெங்களூர்
 சென்னை - பஞ்சாப் சென்னை
 மும்பை - கொல்கத்தா மும்பை

சென்னை - 20, மும்பை - 20, தில்லி - 14, பெங்களூர் - 14, சன்ரைசர்ஸ் - 12, பஞ்சாப் - 12, கொல்கத்தா - 10, ராஜஸ்தான் - 10. 

3-வது சாத்தியக்கூறு

 போட்டி வெற்றி
 ராஜஸ்தான் - சன்ரைசர்ஸ் ராஜஸ்தான் (அ) சன்ரைசர்ஸ்
 தில்லி - பெங்களூர் பெங்களூர்
 கொல்கத்தா - மும்பை மும்பை
 சன்ரைசர்ஸ் - பஞ்சாப் பஞ்சாப்
 பெங்களூர் - ராஜஸ்தான் பெங்களூர்
 சென்னை - தில்லி சென்னை (அ) தில்லி
 மும்பை - சன்ரைசர்ஸ் மும்பை
 பஞ்சாப் - கொல்கத்தா கொல்கத்தா
 தில்லி - ராஜஸ்தான் ராஜஸ்தான் 
 பெங்களூர் - சன்ரைசர்ஸ் பெங்களூர்
 சென்னை - பஞ்சாப் சென்னை
 மும்பை - கொல்கத்தா மும்பை (அ) கொல்கத்தா

சென்னை - 20, மும்பை - 20, பெங்களூர் - 14, தில்லி - 14 , பஞ்சாப் - 12, ராஜஸ்தான் - 12, கொல்கத்தா - 10.

பச்சை வண்ணத்தில் குறிப்பிட்டுள்ள மூன்று ஆட்டங்களில் ராஜஸ்தான், சென்னை, மும்பை ஜெயிப்பதாக வைத்துக்கொண்டால் புள்ளிகள் பட்டியலில் அணிகளின் வரிசை இவ்வாறு அமையும். 

*

இந்த மூன்று சாத்தியக்கூறுகளின்படி அடுத்துவருகிற 12 ஆட்டங்களும் நடைபெற்றால் ஆர்சிபி அணியால் சுலபமாக நெட் ரன்ரேட் சிக்கல் எதுவுமில்லாமல் புள்ளிகளின் அடிப்படையில் ஜம்மென்று பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியும். ஆனால் அதற்கு அந்த அணியும் ஒத்துழைக்கவேண்டும். மீதமுள்ள 3 ஆட்டங்களையுமே வெல்லவேண்டும். அப்படி மட்டும் நடந்தால் ஆர்சிபி ரசிகர்கள் உரக்க விசிலடித்து மகிழலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com