உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலிருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்!

அணியின் நலனைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளோம். இதன்மூலம் இங்கிலாந்து வீரர்கள் கவனச் சிதறல்கள் எதுவுமின்றி...
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியிலிருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்!

போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ், 21 நாள்கள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உலகக் கோப்பைக்கான அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட முறையில் போதை மருந்து பயன்படுத்திய ஹேல்ஸ் மீது 21 நாள்கள் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் இரண்டாவது முறையாகத் தோல்வியடைந்ததால் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இன்னொருமுறை இதுபோல நடந்தால், அவர் ஒரு வருடத் தடையை எதிர்கொள்ள நேரிடும்.  

மே 3 அன்று அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. அதற்கு முன்பு ஹேல்ஸின் தண்டனைக் காலம் முடிந்துவிடும் எனக் கூறப்பட்டது. ஆனால் அடுத்து வருகிற சர்வதேசப் போட்டிகளில் இங்கிலாந்து அணி சார்பாக அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ஈசிபி) நிர்வாக இயக்குநர் ஆஸ்லி ஜைல்ஸ், தேர்வுக்குழுத் தலைவர் எட் ஸ்மித் ஆகியோர் இதுகுறித்து ஆலோசித்து இம்முடிவை எடுத்துள்ளார்கள். இதனால் அலெக்ஸ் ஹேல்ஸால் அடுத்து வருகிற பாகிஸ்தான், அயர்லாந்துக்கு அணிகளுக்கு எதிரான தொடர்கள், உலகக் கோப்பை ஆகிய போட்டிகளில் பங்கேற்க முடியாது. 

இங்கிலாந்து அணியில் ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளோம். அணியின் நலனைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்துள்ளோம். இதன்மூலம் இங்கிலாந்து வீரர்கள் கவனச் சிதறல்கள் எதுவுமின்றி தங்களுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துவார்கள். இந்த நடவடிக்கையின் மூலம் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக ஹேல்ஸ் எண்ணக்கூடாது. அவருக்குத் தேவையான ஆதரவையும் ஆலோசனைகளையும் ஈசிபி நிர்வாகம் வழங்கும் என்று ஆஸ்லி ஜைல்ஸ் கூறியுள்ளார். 

30 வயது ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 11 டெஸ்டுகள், 70 ஒருநாள், 60 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com