பிளே ஆஃப் சுற்றில் தில்லி: வெளியேறியது பெங்களூரு

பெங்களூருவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் சென்னை அணியுடன் இரண்டாவதாக நுழைந்துள்ளது  தில்லி. அதே நேரத்தில் வாய்ப்பை இழந்தது பெங்களூரு.
பிளே ஆஃப் சுற்றில் தில்லி: வெளியேறியது பெங்களூரு

பெங்களூருவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தில்லி. இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றில் சென்னை அணியுடன் இரண்டாவதாக நுழைந்துள்ளது  தில்லி. அதே நேரத்தில் வாய்ப்பை இழந்தது பெங்களூரு.
முதலில் ஆடிய தில்லி கேபிடல்ஸ் 187/5 ரன்களை சேர்த்தது. 
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தில்லி தரப்பில் பிரித்வி ஷா}ஷிகர் தவன் களமிறங்கினர். பிரித்வி ஷா 4 பவுண்டரிகளுடன் 18 ரன்களை சேர்த்த நிலையில், உமேஷ் பந்தில் அவுட்டானார். பின்னர் தவன்}கேப்டன் ஷிரேயஸ் ஐயர் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. 
தவன், ஷிரேயஸ் ஐயர் அரைசதம்: 37 பந்துகளில், 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 50 ரன்கள் விளாசிய தவன், சஹல் பந்தில் வெளியேறினார். அவருக்கு பின் வந்த இளம் வீரர் ரிஷப் பந்த்தும் 7 ரன்களோடு வெளியேறினார். 
கேப்டன் ஷிரேயஸ் ஐயர் 37 பந்துகளில், 3 சிக்ஸர்,  2 பவுண்டரியுடன் 52 ரன்களை விளாசி, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டானார். 
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான காலின் இங்கிராமும் 11 ரன்களோடு வெளியேறிய நிலையில், ஷெர்பேன் ரூதர்போர்ட் 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 28, அக்ஸர் பட்டேல் 16 ஆகியோர் 6}ஆவது விக்கெட்டுக்கு ரன்களை உயர்த்தி இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை குவித்தது தில்லி.
சஹல் 2 விக்கெட்: பெங்களூரு தரப்பில் யுஜவேந்திர சஹல் 2}41, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 188 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு தரப்பில் பார்த்திவ்}கேப்டன் கோலி களமிறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 20 பந்துகளில் 39 ரன்களை விளாசிய பார்த்திவ் பட்டேலை, ரபாடா வெளியேற்றினார். 
1 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 23 ரன்களை சேர்த்த கோலியை, அக்ஸர் பட்டேல் அவுட்டாக்கினார். அப்போது 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களை சேர்த்திருந்தது பெங்களூரு. 
விக்கெட்டுகள் சரிவு: அதன் பின்னர் டி வில்லியர்ஸ்}ஷிவம் துபே இணைந்து ரன்களை சேர்த்தனர். ஆனால் 17 ரன்களுடன் டி வில்லியர்ûஸ வெளியேற்றினார் ரூதர்போர்ட். அடுத்து ஆட வந்த ஹெயின்ரிச் கிளாஸனை 3 ரன்களுக்கும், ஷிவம் துபேவை 24 ரன்களுக்கும் அவுட்டாகினார் அமித் மிஸ்ரா. அப்போது 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது பெங்களூரு.
நிலையாக ஆடிய குர்கீரத் சிங் 27 ரன்களுடன் இஷாந்த் பந்திலும், வாஷிங்டன் சுந்தர் 1 ரன்னில் ரபாடா பந்திலும் வெளியேறினர். 
ஸ்டாய்னிஸ் 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்து தோற்றது பெங்களூரு.
தில்லி தரப்பில் ரபாடா 2}31, அமித் மிஸ்ரா 2}29, இஷாந்த், அக்ஸர், ரூதர்போர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர். மேலும் 16 புள்ளிகளுடன் ரன் சராசரி அடிப்படையில் தில்லி முதலிடத்தை பெற்றது. 
7 ஆண்டுகள் கழித்து பிளே ஆஃப்பில் தில்லி: இந்த வெற்றி மூலம் பிளே ஆஃப் சுற்றில் கடந்த 2012}ஆம் ஆண்டுக்கு பின் தகுதி பெற்றுள்ளது தில்லி. 
ஷிகர் தவன் 4500 ஐபிஎல் ரன்கள்: தில்லி தொடக்க வீரர் ஷிகர் தவன், 50 ரன்கள் அடித்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 4500 ரன்களை கடந்து சாதனை படைத்தார்.


வெற்றிக்கு வித்திட்ட ஷிகர் தவன்}ஷிரேயஸ் ஐயர்.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்                

தில்லி     12    8    4    16
சென்னை     12    8    4    16
மும்பை     12    7    5    14
ஹைதராபாத்    11    5    6    10
கொல்கத்தா    12    5    7    10
பஞ்சாப்    11    5    6    10
ராஜஸ்தான்    12    5    7    10
பெங்களூரு    12    4    8    8

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com