ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸி. 487 டிக்ளேர்

இங்கிலாந்து எதிரான 2-ஆவது டெஸ்ட் 2-ஆவது இன்னிங்ûஸ 487/7 ரன்களுடன் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா..
ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஆஸி. 487 டிக்ளேர்

இங்கிலாந்து எதிரான 2-ஆவது டெஸ்ட் 2-ஆவது இன்னிங்ûஸ 487/7 ரன்களுடன் டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலியா..
 பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸி. முதல் இன்னிங்கில் 284 ரன்களுக்கும், இங்கிலாந்து 372 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகின. ஆட்டத்தின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸி. அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 124/3 ரன்களை எடுத்திருந்தது.
 இந்நிலையில் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை தனது ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்து ஆஸி. அணி தரப்பில் ஸ்டீவ் ஸ்மித்-டிராவிஸ் ஹெட் இணை சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். 7 பவுண்டரியுடன் 51 ரன்களை சேர்த்த டிராவிûஸ அவுட்டாக்கினார் ஸ்டோக்ஸ்.
 ஸ்மித் 25-ஆவது டெஸ்ட் சதம்: பின்னர் ஸ்மித்-மேத்யூ வேட் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். முதல் இன்னிங்ஸிலும் அதிரடி சதம் விளாசிய ஸ்மித், இரண்டாவது இன்னிங்ஸிலம் சதம் அடித்து, தனது 25-ஆவது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். பந்தை சேதப்படுத்திய புகாரில் ஓராண்டு தடை விதிக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்ந்த ஸ்மித் தனது ஆட்டத்திறனை பறைசாற்றியுள்ளார்.
 70-ஆவது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 261 ரன்களை எடுத்திருந்தது ஆஸி. மேத்யூ வேட் தனது 5-ஆவது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார்.
 207 பந்துகளில் 14 பவுண்டரியுடன் 142 ரன்களை எடுத்த ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் பந்தில் வெளியேறினார்.
 தேநீர் இடைவேளையின்போது 89 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்களை எடுத்திருந்தது ஆஸி. மேத்யூ வேட் 86, டிம் பெயின் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 இதன் மூலம் ஆஸி. அணி 266 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
 மேத்யூ வேட் அபார சதம்: 17 பவுண்டரியுடன் 143 பந்துகளில் 110 ரன்களை விளாசி அவுட்டானார் வேட். கேப்டன் பெயின் 34 ரன்களுடன் மொயீன் பந்தில் போல்டானார்.
 112 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் பெயின். பட்டின்சன் 47, பேட் கம்மின்ஸ் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3-85 விக்கெட்டை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com