டிஎன்பிஎல்: லைக்கா கோவை வெற்றி

காரைக்குடி காளை அணிக்கு எதிரான டிஎன்பிஎல் ஆட்டத்தில் லைக்கா கோவை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல்: லைக்கா கோவை வெற்றி

காரைக்குடி காளை அணிக்கு எதிரான டிஎன்பிஎல் ஆட்டத்தில் லைக்கா கோவை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. ஆட்டம் தொடங்கும் முன்பு மழை பெய்ததால் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற லைக்கா கோவை பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஷாருக்கான்-கேப்டன் அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
 அபிநவ் முகுந்த் 32, முகமது கான் 2, அகில் ஸ்ரீநாத் 12 ரன்களுடனும் வெளியேறினர்.
 ஷாருக் கான் 59: மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ஷாருக் கான் 2 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 59 ரன்களை எடுத்து அவுட்டானார். அவருக்கு பின் அந்தோணி தாஸ் 9, பிரதோஷ் ரஞ்சன் 18, கிருஷ்ணமூர்த்தி 6 ரன்களுக்கு வெளியேறினர். மாலோலன் ரங்கராஜன் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களை எடுத்தது லைக்கா கோவை. காரைக்குடி தரப்பில் ராஜ்குமார் 2-38 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 காரைக்குடி 76/5: 155 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய காரைக்குடி காளை அணியால் லைக்கா கோவை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. சூரியபிரகாஷ் 2, கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா 24, ராஜாமணி 7, மான் பாஃப்னா 21, யோ மகேஷ் 0 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.
 கணேஷ் 20, ராஜ்குமார் 13 ரன்களுடன் வெளியேறினர். ஷாஜஹான் 41, அஸ்வின் குமார் 2 ரனக்ளுடன் களத்தில் இருந்தனர்.
 பின்னர் ஆடிய காரைக்குடி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
 லைக்கா தரப்பில் ரங்கராஜன், அந்தோணி தாஸ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com