நடா அமைப்புக்குப் பணிந்தது பிசிசிஐ!

இனிமேல் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடா அமைப்பு...
நடா அமைப்புக்குப் பணிந்தது பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யும் உரிமை நடா அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணைய (நடா) வரம்பில் வரும் போது, பிசிசிஐ மட்டும் அதில் இணையவில்லை. பிசிசிஐயின் இந்தச் செயல்பாடு மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு நெருடலாக உள்ளது. ஆனால், மத்திய அரசு, பிசிசிஐ அமைப்பை இதர தேசிய விளையாட்டு சம்மேளனம் போல் நடத்தக்கூடாது என பிசிசிஐ கருதியது. இன்று இந்த விவகாரத்துக்கு ஓர் தீர்வு கிடைத்துள்ளது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில், விளையாட்டுத்துறை செயலாளர் ராதேஷ்யாம், நடா அமைப்புடன் இதுகுறித்து விவாதித்தார் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி. பிறகு, நடா அமைப்புக்கு பிசிசிஐ கட்டுப்படுவதாக அவர் இன்று தெரிவித்தார்.

இதையடுத்து இனிமேல் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடா அமைப்பு ஊக்க மருந்து சோதனை செய்யும். அதற்கான அதிகாரத்தை உலக ஊக்கமருந்து சோதனை அமைப்பு வழங்கியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com