தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் வரம்பில் பிசிசிஐ

திடீர் திருப்பமாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடாவின்) வரம்பின் கீழ் வருவதற்கு நாட்டின் செல்வாக்கு மிகுந்த விளையாட்டு அமைப்பான பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாள்
தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தின் வரம்பில் பிசிசிஐ

திடீர் திருப்பமாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் (நாடாவின்) வரம்பின் கீழ் வருவதற்கு நாட்டின் செல்வாக்கு மிகுந்த விளையாட்டு அமைப்பான பிசிசிஐ ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதன் மூலம் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் நாடா மூலமே ஊக்க மருந்து சோதனை நடத்தப்படும்.

விளையாட்டு உலகில் நிலவி வரும் ஊக்க மருந்து பழக்கத்தை ஒழித்துக் கட்டும் வகையில் உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் வாடாவின் கீழ் அனைத்து சர்வதேச விளையாட்டு சம்மேளனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும் இதில் அடங்கும்.
இதே போல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும், இணைந்துள்ளது ஆனால் இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பான பிசிசிஐ வாடாவின் கிளை அமைப்பான நாடாவின் கீழ் தங்கள் கிரிக்கெட் வீரர்கள் வர மாட்டார்கள் என தீவிரமாக மறுத்து வந்தது. நாடாவால் வீரர்களுக்கு சோதனை நடத்த அதிகாரம் இல்லை எனக் கூறி வந்தது.

இதுதொடர்பாக ஐசிசியிடமும் கண்டிப்பாக தங்கள் விதிகளைத் தான் பின்பற்ற வேண்டும் என உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் கூறி விட்டது. இந்நிலையில் பிசிசிஐ இதில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐசிசி அறிவுறுத்தியது.

விளையாட்டு அமைச்சகம் கண்டிப்பு: மேலும் இளம் கிரிக்கெட் வீரரான பிரித்வி ஷா சில மாதங்களுக்கு முன்பு ஊக்க மருந்து கலந்திருந்த இருமல் மருந்தை குடித்தார் என சோதனையில் தெரிய வந்ததை அடுத்து 8 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இது பிசிசிஐக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

தென்னாப்பிரிக்க ஏ மற்றும் மகளிர் அணிகள் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக மத்திய அரசு விசா வழங்க வேண்டும். ஆனால் நாடா பிரச்னை காரணமாக விளையாட்டு அமைச்சகம் மெளனம் காத்தது. பிசிசிஐ உடனே நாடாவின் வரம்பில் வர வேண்டும் என்பதற்கான அழுத்தம் எனக் கூறப்பட்டது.

எப்போது எங்கு வேண்டுமானாலும் சோதனை: கிரிக்கெட் வீரர்களிடம், எப்போது, எங்கு வேண்டுமானாலும் தேவைப்படும் போது நாடா அதிகாரிகள் ஊக்க மருந்து சோதனை மேற்கொள்வர். அனைத்து விளையாட்டு அமைப்புகளுக்கும் சட்டம் பொதுவானது என்பதை தீர்மானமாக தெரிவித்தேன். இதுவரை ஸ்வீடனைச் சேர்ந்த ஐடிடிஎம் என்ற தனியார் நிறுவனம் மூலம் கிரிக்கெட் வீரர்கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நாடாவிடம் தரப்பட்டது. 

இனிமேல் நாடாவே நேரடியாக சோதனை செய்யும். இதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் எதுவும் தேவையில்லை. எந்த நாடு, வீரராக இருந்தாலும் நாடா சோதனை செய்யலாம்  என்றார் ராதேஷியாம்.

பிசிசிஐ உறுப்பினர்கள் ஆட்சேபம்

தன்னாட்சியுடன் உள்ள பிசிசிஐ தற்போது ஏனைய தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் போல் மாறி விட்டது. நாடா விவகாரம் போன்ற முக்கிய கொள்கை முடிவை எடுக்க சிஓஏவுக்கு எந்த உரிமையும் இல்லை. அரசின் நிர்பந்தத்தால், பிசிசிஐ பணிந்து தனது தன்னாட்சியை இழந்து விட்டது. சிஇஓ ராகுல் தனது தவறுகளை மறைக்க அரசு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். 

பிரித்வி ஷா ஊக்க மருந்து பயன்படுத்திய பிரச்னையில் பிசிசிஐயின் மெத்தனமான செயல்பாடே இந்நிலைக்கு காரணம். சிஓஏ நிர்வாகத்தை தான் நடத்த வேண்டும். கொள்கை முடிவை பிசிசிஐ பொதுக்குழு தான் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

திடீர் ஒப்புதல்

இதற்கிடையே பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி வெள்ளிக்கிழமை மத்திய விளையாட்டுத் துறை செயலாளர் ராதேஷியாம் ஜுலான்யாவை சந்தித்துப் பேசினார். அப்போது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணைய வரம்பின் கீழ் பிசிசிஐ வர ஒப்புக் கொண்டாரர்.

இதனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் நாடாவின் மூலம் சோதனைக்கு உள்படுத்தப்படுவர். 

இதுகுறித்து ராதேஷியாம் கூறியதாவது: 

ஊக்க மருந்து சோதனையின் தரம், அதற்கான கருவிகள், மருத்துவ நிபுணர்களின் திறன் குறித்து 3 சந்தேகங்களை பிசிசிஐ எழுப்பியது. அவர்களுக்கு எத்தகைய வசதிகள் வேண்டுமோ அவை செய்து தரப்படும். இதற்காக சிறிது கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற சம்மேளனங்களில் இருந்து பிசிசிஐ வேறுபட்டதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com