தொடங்கியது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டி

கோவையில் 55-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான ஆடவர் கூடைப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) தொடங்கியது.
முதல் ஆட்டத்தில்  விளையாடிய சென்னை இந்தியன் வங்கி, லோனாவாலா கடற்படை அணி வீரர்கள்.
முதல் ஆட்டத்தில்  விளையாடிய சென்னை இந்தியன் வங்கி, லோனாவாலா கடற்படை அணி வீரர்கள்.

கோவையில் 55-ஆவது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான ஆடவர் கூடைப்பந்து போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) தொடங்கியது.
 பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 54 ஆண்டுகளாக அகில இந்திய ஆடவர் கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 55-ஆவது கூடைப்பந்து போட்டி ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி வரும் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டியில், சென்னை வருமான வரித் துறை அணி, தில்லி இந்திய விமானப் படை அணி, கபூர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அணி, கேரள மின்வாரிய அணி, தில்லி இந்திய ராணுவம், சென்னை இந்தியன் வங்கி, லோனாவாலா இந்திய கடற்படை அணி, சென்னை சுங்க வரித் துறை அணி ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
 முதல் நாள் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் லோனாவாலா கடற்படை அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் கடற்படை அணி 91 - 81 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியன் வங்கி அணியைத் தோற்கடித்தது. 
இரண்டாவது ஆட்டத்தில் இந்திய விமானப்படை அணி 103 - 86 என்ற புள்ளிகள் கணக்கில் கபூர்தலா ஆர்.சி.எஃப். அணியை தோற்கடித்தது. மூன்றாவது ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 75 - 45 என்ற புள்ளிகள் கணக்கில் சுங்க வரித் துறை அணியைத் தோற்கடித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com