சுடச்சுட

  

  2022 காமன்வெல்த் கேம்ஸில் மகளிர் கிரிக்கெட்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  By எழில்  |   Published on : 13th August 2019 04:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  slvsafg

   

  இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் 2022-ல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

  பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது. போட்டிகளை நடத்துவதற்கான நகரங்களையும் காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு தேர்வு செய்கிறது

  நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அடுத்ததாக 2022-ல் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது. அப்போட்டியில் மகளிர் கிரிக்கெட், பீச் வாலிபால், பாரா டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  பிர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும். 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஐசிசி உதவியாக இருக்கும். 2022 ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 7 வரை காமன்வெல்த் கேம்ஸ் 2022 நடைபெறவுள்ளது. 

  20 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா தங்கமும் ஆஸ்திரேலியா வெள்ளியும் பெற்றன. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai