2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என ஐசிசி நம்பிக்கையளித்துள்ளது: எம்சிசி தலைவர் மைக் கேட்டிங்

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் நிச்சயம் இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) நம்பிக்கையளித்ததாக மைக் கேட்டிங் தெரிவித்தார். 
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என ஐசிசி நம்பிக்கையளித்துள்ளது: எம்சிசி தலைவர் மைக் கேட்டிங்

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் நிச்சயம் இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) நம்பிக்கையளித்ததாக மைக் கேட்டிங் தெரிவித்தார். உலக கிரிக்கெட் கமிட்டி (எம்சிசி) தலைவர் மைக் கேட்டிங் இதுதொடர்பாக கூறியதாவது: 

கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைப்பது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் தலைமைச் செயலர் மனு ஷானே உடன் ஆலோசனை நடத்தினோம். அதில் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் நிச்சயம் இடம்பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஐசிசி நம்பிக்கை தெரிவித்தது. இவ்வாறு நடந்தால் அது கிரிக்கெட் விளயாட்டுக்கு உலகளவில் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தும். 

அதிலும் 2 வாரங்கள் மட்டுமே அதன் கால அளவு என்பதால் 4 வருடங்களுக்கு ஒருமுறை கிரிக்கெட்டில் இதற்கான அட்டவணையை ஏற்படுத்துவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. கிரிக்கெட்டில் அடுத்த 18 மாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் முதல்படியாக தேசிய ஊக்கமருத்து தடுப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்பட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. 

இதேபோன்று ஒலிம்பிக் சம்மேளனமும் ஐசிசி உடன் இணையும்போது கிரிக்கெட் முழுமைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 2022 பர்மிங்கம் காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட் இடம்பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கான அனுமதி கிடைக்க வேண்டும் என்று நானும் விரும்புகிறேன். ஒருவேளை கிரிக்கெட் அதில் அதிகார்பூர்வமாக இடம்பெற்றால் 1998 கோலாலம்பூர் காமன்வெல்த் போட்டிகளுக்கு பிறகு இணைவது இதுவே முதன்முறையாகும்.

பாகிஸ்தானில் கிரிக்கெட் நடத்தப்படுவது தொடர்பாக பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் வாசிம் கான் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அங்கு சில பாதுகாப்பு குறைபாடு நிலவுகிறது. இவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டால் எனக்கும் மகிழ்ச்சி தான் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com