அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை ஏற்றேன்: கோலி

இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன் என கேப்டன் கோலி கூறியுள்ளார்.


இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன் என கேப்டன் கோலி கூறியுள்ளார்.
மே.இ.தீவுகள் அணியை டிஎல்எஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. கேப்டன் கோலி 120 ரன்களையும், ஷிரேயஸ் ஐயர் 71 ரன்களையும் விளாசினர்.
பின்னர் கேப்டன் கோலி கூறியதாவது: தவன், ரோஹித் சர்மா ஆகியோர் அவுட்டான நிலையில், அணியை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். 270 ரன்களுக்கு மேல் ஸ்கோர் இருந்தால், அது எதிரணிக்கு சவாலானது என்பது தெரியும். தொடக்க வரிசையில் முதல் 3 வீரர்களில் ஒருவர் அதிக ரன்களை எடுக்க வேண்டும். மூத்த வீரர் என்ற நிலையில் நான் களமிறங்கினேன். பிட்ச் படிப்படியாக ஆட சிரமமாக இருந்தது. முதலில் ஆட வேண்டும் என்பதே இதற்காக தான் முடிவெடுத்தோம். பின்னர் ஆடிய மே.இ.தீவு வீரர்கள் அந்த பிட்சில் ஆட திணறினர். அவர்களது விக்கெட்டுகளை அவ்வப்போது வீழ்த்தியது உதவியாக இருந்தது. இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், குல்தீப்பை பந்துவீசச் செய்தோம். ஷிரேயஸ் ஐயர் நம்பிக்கையுடன் ஆடி ரன்களை குவித்தார். 
ஜேஸன் ஹோல்டர் (மே.இ.தீவுகள் கேப்டன்): நாங்கள் சிறப்பாக பந்துவீசியும் வெற்றி பெறாததது அதிருப்தியாக உள்ளது. ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தும் வெற்றியை நழுவ விட்டோம். பொறுப்பாக ஆட வேண்டும். ஈரப்பதமான நிலையிலும், பவுலர்கள் சிறப்பாக வீசினர். பேட்ஸ்மேன்கள் அணியை அவ்வப்போது கைவிட்டு விடுகின்றனர்.
ஷிரேயஸ் ஐயர்: இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் ஆடியது, அணியில் தொடர்ந்து ஆடும் வாய்ப்பை தரும். ஏ அணியில் சிறப்பாக ஆடியதும், மே.இ.தீவுகள் மைதான சூழலை அறிந்து கொண்டதும் உதவியது. அணியில் நீடித்து ஆடி என்னை நிரூபிக்க விரும்புகிறேன். இணைந்து ஆட வேண்டும் என கோலி கூறினார். அதன்படி எச்சரிக்கையுடன் ஆடினேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com