டேவிஸ் கோப்பை:  ஏஐடிஏவின் கோரிக்கை நிராகரிப்பு

இந்திய-பாக். டேவிஸ் கோப்பை போட்டியை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஏஐடியுவின் கோரிக்கையை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நிராகரித்து விட்டது.
டேவிஸ் கோப்பை:  ஏஐடிஏவின் கோரிக்கை நிராகரிப்பு


இந்திய-பாக். டேவிஸ் கோப்பை போட்டியை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்ற ஏஐடியுவின் கோரிக்கையை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நிராகரித்து விட்டது.
வரும் செப்டம்பர் 14, 15 தேதிகளில் இஸ்லாமாபாதில் இரு நாடுகள் இடையிலான ஆசிய ஓசேனியா டேவிஸ் கோப்பை போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய அணியினர் தங்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் போட்டியை நடுநிலையான இடத்துக்கு மாற்றவும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தற்போதைய சூழலின்படி நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் அல்லது நடுநிலையான இடத்துக்கு மாற்ற வேண்டும் என ஐடிஎப் செயல் இயக்குநர் ஜஸ்டின் ஆல்பர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளது ஏஐடிஏ.
அதே நேரத்தில் இந்தியாவுடன் தூதரக உறவுகளை துண்டித்துள்ளது பாகிஸ்தான். அங்கு தொடர்ந்து பதற்றம் உள்ளது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது என ஏஐடிஏ கூறிவிட்டது.
தற்போதைய நிலையில் இஸ்லாமாபாதில் இருந்து போட்டியை வேறிடத்துக்கு மாற்ற முடியாது எனக்கூறியுள்ள ஐடிஎப், பாதுகாப்பு ஏற்பாடு குறித்த செயல்திட்டத்தையும் ஏஐடிஏவிடம் அளித்தது.
இது இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு பெரிய  பின்னடைவாக கருதப்படுகிறது.
மீண்டும் டேவிஸ் கோப்பை இயக்குநர் குழுவை நாட உள்ளோம். அதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் 19-ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என ஏஐடிஏ பொதுச் செயலாளர் ஹிரோன்மாய் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com