ஸ்ரீசாந்த் தடைக்காலம் 7 ஆண்டுகளாக குறைப்பு: 100 விக்கெட்டுகளை கைப்பற்றப்போவதாக நம்பிக்கை

ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை, 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முயற்சிப்பேன் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்
ஸ்ரீசாந்த் தடைக்காலம் 7 ஆண்டுகளாக குறைப்பு: 100 விக்கெட்டுகளை கைப்பற்றப்போவதாக நம்பிக்கை


ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை, 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முயற்சிப்பேன் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். 

2013 ஐபிஎல்-இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய கேரள வீரர் ஸ்ரீசாந்த் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை இன்று 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதன்மூலம், அவருடைய தடைக்காலம் செப்டம்பர் 12, 2020 உடன் முடிவுக்கு வருகிறது.  

இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த், "தற்போது நான் கேட்ட செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி. அந்த பிரார்த்தனைக்கு விடை கிடைத்துவிட்டது. எனக்கு தற்போது 36 வயது. அடுத்த ஆண்டு எனக்கு 37 வயதாகும். இதுவரை 87 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளேன். எனது டெஸ்ட் கிரிக்கெட்டை 100 விக்கெட்டுகளுடன் நிறைவு செய்வதுதான் என்னுடைய இலக்கு. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்குத் திரும்புவேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். விராட் கோலி தலைமையின் கீழ் விளையாட எனக்கு எப்பொழுதுமே விருப்பம் உண்டு" என்றார். 

ஸ்ரீசாந்த்:

டெஸ்ட் கிரிக்கெட்: 27 ஆட்டங்கள், 87 விக்கெட்டுகள்

ஒருநாள் கிரிக்கெட்: 53 ஆட்டங்கள், 75 விக்கெட்டுகள்

டி20 கிரிக்கெட்: 10 ஆட்டங்கள், 7 விக்கெட்டுகள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com