சீனியர் அணியில் இடம்பிடித்தார் ஜூனியர் டெண்டுல்கர்!

சச்சின் டெண்டுல்கர் மகனும், இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார்.
சீனியர் அணியில் இடம்பிடித்தார் ஜூனியர் டெண்டுல்கர்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகனும், இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். நாக்பூரில் நடைபெறவுள்ள பாபுனா கோப்பை போட்டியில் மும்பை அணி ஆடுகிறது.

இதில் பங்கேற்கும் வரும் சீசனுக்காக 15 பேர் கொண்ட மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அணியை மூத்த வீரர் சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். மேலும் ஆதித்ய தாரே, சர்ஃப்ராஸ் கான் உள்ளிட்ட இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

15 பேர் கொண்ட மும்பை அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஆதித்ய தாரே, ஜேய் பிஸ்தா, சர்ஃப்ராஸ் கான், ஷுபம் ரஞ்சனே, ரனௌக் ஷர்மா, ஏக்நாத் கேர்கார், சூஃபியான் ஷேக், ஆகாஷ் பார்கர், ஷம்ஸ் முலானி, ஆதித்ய துமால், ஷஷாங்க் அத்தர்தே, அக்யூப் குரேஷி, க்ருதிக் ஹனகாவாடி, அர்ஜுன் டெண்டுல்கர்.

19 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் ஏற்கனவே மும்பை டி20 வீக் போட்டிகளில் விளையாட ரூ.5 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகவும் செயல்பட்டார். 

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து கௌன்டி அணிகளுக்காகவும் ஆடினார். இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் அணிகளில் மட்டுமே இடம்பிடித்து வந்த அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது சீனியர் அணியில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com