கிரிக்கெட் வீரர்களை விடவும் மற்ற விளையாட்டு வீரர்களுக்குக் குறைவான வசதிகளே கிடைக்கின்றன: சேவாக் வருத்தம்

கிரிக்கெட் போட்டிகளை விடவும் ஒலிம்பிக்ஸ் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் மிகப்பெரியவை என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் சேவாக்.

ஒரு நூல் வெளியீட்டு விழாவில் இரு தடகள வீரர்களைப் பேட்டி கண்ட சேவாக், பிறகு கூறியதாவது:

கிரிக்கெட் போட்டிகளை விடவும் ஒலிம்பிக்ஸ் மற்றும் காமன்வெல்த் போட்டிகள் மிகப்பெரியவை என்று நான் எப்போதும் நினைப்பேன். இந்தத் தடகள வீரர்களை நன்குக் கவனித்துக்கொள்வார்கள் என நினைத்தேன். அதாவது நல்ல, சத்தான உணவுகள், பயிற்சியாளர்கள், டிரெயினர்கள் எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும் என எண்ணியிருந்தேன். 

ஆனால் அவர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு, கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைக்கும் வசதிகளில் 10% அல்லது 20% கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை என உணர்ந்தேன். அப்படியிருந்தும் அவர்கள் பதக்கங்களை வெல்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காகப் பதக்கங்கள் வெல்வதால் தற்போது கிடைப்பதை விடவும் அதிக வசதிகளுக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com